வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 441-445 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 446 – 450
- உலர் சளி வெருளி – Mucophobia
உலர் சளி தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் உலர்சளி வெருளி.
சளியில் உள்ள தொற்றுயி நுண்மிகள் மூலம் பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் பரவுவதால், சளிமீதான பேரச்சம் வருகிறது. இருமலைத் தூண்டும்; சோர்வை உண்டாக்கும்; பொதுவான நலிவை ஏற்படுத்தும்; பல நாட்களுக்கு உடலைப் பாதிக்கக்கூடும்; என்ற காரணங்களால் உலர்சளி மீது பேரச்சங்கள் வருகின்றன.
Nakusophobia என்பதையும் உலர்சளி வெருளி என முன்பதிப்பில் குறித்திருந்தேன். எனினும் இதை ஆசனவாய் வெருளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே இப்பதிப்பில் எடுத்து விடடேன்.
00
- உலூசி நேசிப்பு வெருளி – Lovesyouphobia
உலூசி ஆடர்லி என்னும் புகழ்வாணர், அவருடன் இருப்போர் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் உலூசி நேசிப்பு வெருளி.
பொறாமையின் காரணமாகவும் இவ்வெருளி உருவாகலாம்.
‘உந்தன் நேசிப்பு’ வெருளி என்று நேர் பொருளாகச் சொல்லாமல் தெளிவு கருதி உரியவர் பெயரைக் குறிப்பிட்டு உலூசி (ஆடர்லி) நேசிப்பு வெருளி எனக் குறித்துள்ளேன்.
சிலர் அப்படி ஒன்றும் உலூசி ஆடர்லி தொடர்பில் பேரச்சம் கொண்டவர் இல்லை. எனவே, இதனை வெருளிப்பட்டியலில் இருந்து எடுத்துவிடலாம் என்கின்றனர்.
புகழ்வாணர் வெருளியைச் சேர்ந்தது.
00
- உலூசியானா வெருளி – Louisianaphobia
உலூசியானா(Louisiana) மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உலூசியானா வெருளி.
ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது உலூசியானா. இதன் தலைநகரம் பாடன் இரெளசு(Baton Rouge).
00
- உலூயிகி வெருளி – Luigiphobia
காணாட்டப் புனைவுரு உலூயிகி (Luigi )குறித்த வரம்பற்ற பேரச்சம் உலூயிகி வெருளி.
00
- உலை வெருளி – Fornaciphobia
உலை/ சூளை (furnace) குறித்த வரம்பற்ற பேரச்சம் உலை வெருளி.
fornaci என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் உலை/சூளை.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply