(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி)

எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.
எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

  1. எண் வெருளி – Numerophobia / Arithmophobia
    எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் எண் வெருளி.
    எண்(19), எண்கை(1), எண்பதம்(1), எண்பேரெச்சம் (2), எண்மர்(2) என எண்ணிக்கை தொடர்பான சொற்களைச் சங்கப்பாடல்களில் காணலாம். எண் என்பது எண்ணிக்கை பொருளுடன், எட்டு என்ற எண்ணிக்கை, எளிமை ஆகிய பொருள்களையும் தரும் வகையில் சொற்கள் உள்ளன. எட்டாம் எண் ஆகாது, 13 ஆம் எண் துயரம் தரும் என்பன போன்று எண்களைக் கண்டு அஞ்சுவது எண் வெருளி.
    arithmetic என்றால் கணக்குதான். எனினும் கணக்கிற்கு அடிப்படை எண்கள் அல்லவா? எனவே, அந்த அடிப்படையில் Arithmophobia என்றும் குறிக்கப் பெறுகிறது.
    arithmo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எண்.
    numer என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எண்.
    00
  2. எண்காலி வெருளி – Chapodiphobia
    `எண் காலிபற்றிய அளவுகடந்த பேரச்சம் எண்காலி வெருளி.
    எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எண்காலி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    00