(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி)

ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி.

ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.

00

ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி.

ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம்.

00

ஐந்தாம் எண் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐந்தாம் எண் வெருளி.

penta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஐந்து.

Quinque > Quinta என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஐந்து.

ஐந்தெழுத்து உள்ள பெயர், ஐந்தாம் நாளில் நடைபெறும் நிகழ்வு முதலானவற்றின் மீது தேவையற்ற பேரச்சம் கொள்வர். 

சீன எண்களுக்குரிய ஒலிப்பு முறை துயரம் அல்லது அவலம் அல்லது எதிர்மறை தரும் வேறு சொல்லின் ஒலிப்பிற்கு ஒத்து வருவதால்,அதை எண்ணி அத்தகைய எண்களைக்  கண்டு தேவையற்று அஞ்சுவோர் உள்ளனர்.

5 ஆம் எண்ணின் ஒலிப்பு, ‘இல்லை’ என்னும் பொருள் கொண்ட சொல்லினை ஒத்திருப்பதால்  5 ஆம் எண் கண்டு பேரச்சம் வருகிறது.

00

ஐந்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐந்தாம் வகுப்பு வெருளி.

தொடக்கப்பள்ளியின் நிறைவாண்டு ஐந்தாம் நிலை. இதில் வெற்றி பெற்றால் உயர்நிலைப்பள்ளி செல்லலாம். எனவே, ஐந்தாம் நிலை குறித்து அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

தொடக்கப்பள்ளிக்கூட வெருளியும் நடுநிலை/உயர்நிலைப்பள்ளிக்கூட வெருளியும் உள்ளவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

00

ஐந்தன்கூறு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஐந்தன் கூறு வெருளி.

“Pempto” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஐந்தாவது.

ஐந்தாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு ஐந்தன் கூறு வெருளி வர வாய்ப்புள்ளது.

00

(தொடரும்)