வெருளி நோய்கள் 549-553: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 544-548 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 549-553
549. ஒட்டகச் சிவிங்கி வெருளி – Kamilopardaliphobia/ Giraffeophobia(21)
ஒட்டகச்சிவிங்கி குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டகச்சிவிங்கி வெருளி.
kயmēlos என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஒட்டகம் என்று பொருள். Kamilopardali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒட்டகச்சிவிங்கி.
விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டகச் சிவிங்கி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
550. ஒட்டி வெருளி – Pittakionophobia / Stickerphobia
ஒட்டி(Sticker) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒட்டி வெருளி.
ஒட்டி வெருளிக்கு ஆளானோர் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆனால் இவ்வெருளிக்கு ஆளானோர் தாங்கள் மட்டுமே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக எண்ணி இதற்குப் போய் அளவற்ற பேரச்சம் வருகிறதே என வெட்கப்பட்டுப் பிறரிடம் சொல்வதில்லை என்றும் மருத்துவ ஆய்வர்கள் கூறுகின்றனர்.
‘Pittakion‘ என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் ‘pittacium‘ என்னும் இலத்தீன் சொல்லிற்கும் சிட்டை (lable)அல்லது ஒட்டி(stick) எனப் பொருள்.
00
551. ஒட்டுயிரி வெருளி-Parasitophobia
ஒட்டுயிரிகள்(parasites) மீது காரணமின்றி வரும் அச்சமே ஒட்டுயிரி வெருளி.
ஆற்றுக்குருடு(Onchocerciasis) முதலான ஒட்டுண்ணி நோய்கள் ஏற்படும் என்ற அச்சத்தாலும் ஒட்டுயிரி வெருளி வரும். ஒட்டுண்ணி வெருளி என்றும் சொல்வர்.
புழு(த்தொற்று) வெருளி(Helminthophobia), புழுக்கள் வெருளி (Scoleciphobia, Vermiphobia) போன்றதே!
00
552. ஒதுக்கறை திறப்பு வெருளி – Auchloclaustrophobia
ஒதுக்கறை(Closet) திறப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஒதுக்கறை திறப்பு வெருளி.
அந்தரங்க அறை, ஒதுக்கிடம், ஒதுக்கறை, கழிவிடம், கழிப்பிடம், தனிச்சிற்றறை, நிலையடுக்கு, தனி அறை முதலான பல பொருள்களில் இந்த இடத்திற்கு ஏற்ற ஒதுக்கறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூடப்பட்ட அறை அல்லது பேழை(அலமாரி) முதலியவற்றைத் திறக்கும்பொழுது உள்ளே உள்ளது கொட்டி விடுமோ, உள்ளே இருந்து பூச்சி அல்லது பல்லி முதலிய உயிரினம் வருமோ மேலே விழுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
.
Auchlo என்பது என்னும் கூட்டம் என்னும் பொருளுடைய சொல்லுடன் தொடர்புடையது. claustrum என்பது இலத்தீன் மூலச்சொல். இதன்பொருள் அடைப்பு / மூடப்பட்டஇடம்.
00
553. ஒப்பனை உதவுநர் வெருளி – Fucuphobia
ஒப்பனை உதவுநர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது ஒப்பனை உதவுநர் வெருளி.
ஒப்பனை உதவுநர் சரியான தரமான ஒப்பனைப் பொருள்களை வாங்காமலும் முறையான கலவை மேற்கொள்ளாமலும் நன்முறையில் ஒப்பனை புரியாமலும் உடல் அழகைக் கெடுப்பர் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துவர் என்று வரம்பு கடந்த பேரச்சம் கொள்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply