வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 579-583
579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia
ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி.
ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் ஓக்கலகோமா நகரம்.
00
580. ஓங்கில் வெருளி – Phocodelfiniphobia / Delfiniphobia
ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி.
ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது.
Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி இனத்திற்கு நெருக்கமான இனம் என்பதால் அவ்வாறு கூறுகின்றனர். எனினும் வேறுபடுத்த ஓங்கில் என்று குறிக்கின்றனர்.
00
581. ஓடுகள் வெருளி – Plakidiophobia
ஓடுகள் (tiles) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓடுகள் வெருளி.
தரை ஓடுகள் வழுக்கிவிட்டுக் காயம் ஏற்படுத்தும், தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு முதலான வேறு நலிவுகளை ஏற்படுத்திவிடும் என இத்தகையோர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
582. ஓட்ட வெருளி – Treximophobia
ஓடுதல் குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் ஓட்ட வெருளி.
Treximo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஓட்டம்.
00
583. ஓட்டுநர் வெருளி-Umersermophobia
வாடகை ஊர்தி ஓட்டுநர் மீதான அளவு கடந்த பேரச்சம் (வாடகை) ஓட்டுநர் வெருளி.
ஓட்டுநர் சிலரின் எரிச்சல் மூட்டும் பேச்சு, அவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்களோ என்ற ஐயம், சிலரின் தோற்றம், வாடகை ஊர்தியில் கடத்தப்பட்ட செய்திகளால் ஏற்படும் கலக்கம் போன்றவற்றால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் மனப்பதற்றம் முதலியவற்றை உருவாக்குகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply