வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 599-603: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 604-608
604. கடற்கன்னி வெருளி – Serenephobia
கடற்கன்னிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கன்னி வெருளி.
serene என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடற்கன்னி
00
605. கடற்குதிரை வெருளி – Odovainophobia
கடற்குதிரை அல்லது பனிக்கடல் யானை(walrus) என அழைக்கப்பெறும் கடல் வாழ் உயிரி மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்குதிரை வெருளி.
இதனைக் கடல் சிங்கம் என்றும் கூறுகின்றனர்.
00
606. கடற்கோழி வெருளி-Pigkouinophobia
கடற்கோழி(penguin) மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்கோழி வெருளி.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நீர் வாழ் பறக்காத பறவையான இதனை ஒயில் நடைப்பறவை; எனவே ஒயிலி எனக் குறிக்கிறது.
00
607. கடி வெருளி – Daknophobia/Bitenphobia(1)
கடித்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடி வெருளி.
dakno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கடித்தல்.
00
608. கடனட்டை வெருளி – Pistotikikartaphobia
கடனட்டை (credit card) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடனட்டை வெருளி.
கடன் அட்டையைப் பயன்படுத்தும பொழுது மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும் தவணை தப்புவதாலும் வட்டி ஏறுவதாலும் வங்கியினர் அடியாள்கள் வைத்து மிரட்டுவதுபோல் கடுமையாக நடந்துகொள்வதாலும் கடன் அட்டைகள் மீது பேரச்சம் கொள்கின்றனர்.நுழைவுக்கட்டணம் இல்லை எனக் கூறிக் கடன் அட்டை வழங்கிவிட்டு, நிறுவத்தினர் சொல்லாமலே அத்தொகையைச் சேமிப்புப் பணத்தில் பிடித்து விடுகின்றனர் போன்ற நாம் அறியாமலே பிடிக்கப்படும் பணம் குறித்தும் அஞ்சுகின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply