(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி)

கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி.

பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர்.

00

கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி.

உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது.

00

கலப்பான்/கலப்பி (blender) குறித்த வரம்பற்ற பேரச்சம் கலப்பி வெருளி.

கலப்பான் அல்லது கலப்பியை இயக்கும் பொழுது ஏற்படும் ஒலியினால் இதன் மீது பேரச்சம் கொள்கின்றனர் சிலர். எனவே,ஒலி அல்லது இரைச்சல் வெருளி உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வரும் வாய்புள்ளது.

00

கலப்பிசை(blues music) குறித்த வரம்பற்ற பேரச்சம் கலப்பிசை வெருளி.

அவலமும் அல்லலும் என்னும் பொருள் உடைய blue devils என்பதிலிருந்து Blues என்னும் சொல் உருவானது.

00

கலராடோ(Colorado) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலராடோ வெருளி.

கலராடோ ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது. இதன் தலைநகரம் தென்வர்(Denver).

00

(தொடரும்)