(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி)

கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி.

கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர்.

Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை.

00

00

கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கழுதைப்புலி வெருளி.

பார்க்க நன்றாக இல்லை என்று கழுதைப்புலிகளை வெறுப்பவர்களும் உள்ளனர். அதன் ஒரு வகைச்சிரிப்பைப் பார்த்து அச்சப்படுபவர்களும் உள்ளனர். இதனைக் கேள்வியுற்றுக் கழுதைப்புலியைப் பார்க்காமலே அதன்மீது அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

கழுதைப்புலியைக் கடுவாய் என்றும் தமிழில் குறிப்பர்.

சிவப்பு நிறக் கைகளையும் கடுமையான வாயையும் உடையது என்பதைக் குறிப்பிடும் வகையில் “செங்கைவெங்கடுவாய்” என்கிறது இரகுவம்சம். எனவே, திரைப்படங்கள், தொலைக்காட்சிப்படங்களில் பார்ப்பவர்களுக்கு இதன்மேல் பேரச்சம் வருகிறது.

00

ஏனம் கழுவிக்கான கழுவு நீர்மம்(dishwashing liquid) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கழுவு நீர்ம வெருளி.

கழுவு நீர்மத்தைப்  பயன்படுத்துவதால், கைகளில் அரிப்பு வரும், ஒவ்வாமை ஏற்படும் என்று பெரிதும் கவலைப்பட்டுப் பேரச்சத்திற்கு ஆட்படுகின்றனர்.

காண்க: கழுவுத் தூள்  வெருளி-Wajjeophobia

00

கழுவு பொறி(pressure washer)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழுவு பொறி வெருளி.

கழுவுபொறி கட்டடங்கள், ஊர்திகள் மேற்பரப்புகளில் படிந்துள்ள வண்ணப்பூச்சு, தூசி, சேறு பிற அழுக்குக் கறைகளை அகற்றப் பயன்படுகிறது. கழுவு பொறி பயன்படுத்துவோருக்கு அல்லது பயன்படுத்தும்இடத்தில் உள்ளவர்களுக்கு இதனால் தீங்கு நேருமோ என்று தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.

00

(தொடரும்)