வெருளி நோய்கள் 796-800: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 791-795 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 796-800
- கிறித்துநாள் வெருளி – Viciquinquiphobia / Christougenniatikophobia/ Yedanshuphobia
கிறித்துப் பிறப்பு நாள் குறித்த பேரச்சம் கிறித்துநாள் வெருளி.
கிறித்துப்பிறப்பு(கிறித்துமசு) கொண்டாட்டங்கள் குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் சிறாருக்கே மிகுதியாக வருகிறது.
கிறித்துப் பிறப்பு வெருளி என்றால் கிறித்து பிறந்தது குறித்த பேரச்சம் என்றாகிறது. கிறித்துப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பேரச்சத்தைத்தான் இங்கே குறிக்கிறது. எனவே, சுருக்கமாகக் கிறித்து நாள் என்பது சரியாக இருக்கும்.
00
- கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி – Julelophobia
கிறித்துப்பிறப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி.
கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- கிறித்துமசு பாட்டி வெருளி – Kyriaclausophobia
கிறித்துமசு பாட்டி(திருவாட்டி கிளெசு) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிறித்துமசு பாட்டி வெருளி.
கிறித்துமசு தாத்தா வெருளி(Santaphobia, or Clausophobia, or Hohophobia) உள்ளவர்களுக்குக் கிறித்துமசு பாட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- கிறித்துவ வெருளி –Christophobia
கிறித்துவ சமயம் குறித்த அளவுகடந்த பேரச்சம் கிறித்துவ வெருளி.
கிறிததுவர் வெருளி போன்றதுதான் இதுவும்.
காண்க : கிறித்துவர்வெருளி-Christianophobia
00
- கிறித்துவர் வெருளி-Christianophobia
கிறித்துவர் மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கிறித்துவர் வெருளி.
இதுவும் கிறித்துவ வெருளி போன்றதே. எனினும் கிறித்துவர்களின் வழிபாடுகள், மீட்புக் கூட்டங்கள் முதலானவற்றால் கிறித்துவர்கள் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளமையால் தனியாகவும் குறிப்பிடப்படுகிறது. கிறித்து சமயத்துடன், கிறித்துவ மறை நூலான விவிலியம், கிறித்துவ விழாக்கள், கிறித்துவ வழிபாடுகள், கிறித்துவக்கோயில்கள் எனக் கிறித்துவம் தொடர்பானவற்றின் மீது தேவையற்ற வெறுப்பு கொள்வர் இவர்கள்.
தங்களின் பரப்புரையால் தங்கள் குடும்பத்தினரை அவர்கள் சமயத்திற்கு மாற்றிவிடுவார்களோ, இதனால் நமக்குத் தெய்வக் குற்றம் ஏற்படுமோ என்று அஞ்சுவர் இத்தகையோர்.
இசுலாமிய நாடுகள், இந்தியாவில் உள்ள இந்துக்கள், நாத்திகர்கள் ஆகியோரிடம் கிறித்துவர் வெருளி இருப்பதாகக் கூறுகின்றனர்.
காண்க : கிறித்துவ வெருளி -Christophobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply