வெருளி நோய்கள் 891-895: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 886-890: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 891-895
- கூட்டாண்மை வெருளி -Lwuntophobia
கூட்டாட்சி, கூட்டுரிமைக் குடியிருப்பு, கூட்டாண்மை(condominium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூட்டாண்மை வெருளி.
00
- கூபிவெருளி – Scoobyphobia
புனைவுரு இசுகூபி -டூ (Scooby Doo) குறித்த வரம்பற்ற பேரச்சம் கூபிவெருளி.
(இசு)கூபி-டூ (Scooby-Doo) என்பது அமெரிக்க இயங்குபடத் தொடராகும்.
00
- கூம்பு தித்தி வெருளி – Candycornphobia
கூம்பு தித்தி குறித்த வரம்பற்ற பேரச்சம் கூம்பு தித்தி வெருளி
1880 இல் இஃது முதலில் உற்பத்தியான பொழுது இதன் பெயர் கோழித்தீனி(Chicken Feed) என்பதுதான். கற்கண்டு நிறுவனம் (Wunderlee Candy Company) ஒன்று இதனை உற்பத்தி செய்தபொழுது அந்நிறுவனப் பெயரையும் இதன் வடிவத்தையும் இணைத்து candy corn என்றனர்.
00
- கூர் குத்து வெருளி – Pungophobia
கூர் குத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூர் குத்து வெருளி.
pungo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குத்து.
கத்தி போன்ற கூரிய பொருளால் குத்தப்படுவோம் எனக் காரணமற்று அல்லது அளவுகடந்து அச்சம் கொள்வது. கூரிய கரிக்கோல்(பென்சில்)போன்றவற்றையும் பயன்படுத்த அஞ்சுவர்.
00
- கூர் வெருளி-Aichmophobia
கூர்மையான முனையுடைய எப்பொருள் பார்ததாலும் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் கூர் வெருளி.
கத்தி முனை, எழுதி(pen) முனை, அறைகலன்களின் முனை, கட்டுமானப் பொருள்களின் முனை, எப்பகுதியாய் இருந்தாலும் அதன் நீட்சி, அம்புபோல் மடிக்கப்பட்டகூர்மையான தாள் எனக் கூர்முனையாகத் தோற்றமளிக்கும் எல்லாமும் அல்லது இவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூரிய பொருள்களின் மீது இத்தகையோருக்குப் பேரச்சம் வரும்.
சிலர், மருந்தூசி வெருளியையும்(Trypanophobia) கூர் வெருளி என்கின்றனர். அதுவும் கூர் வெருளி போன்றதுதான். எனினும் அதனைத் தனியாகவே குறிப்பிடலாம்.
நுனை வெருளி(Belonephobia), அயில் வெருளி(Enetophobia) ஆகியவற்றுடன் ஒப்புமை உடையது.
aichmē என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் முனை.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply