(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி)

சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.
பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.
ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.
சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல் எனச் செந்தமிழ்ச்சொற்பிறப்பியலில் குறிக்கப்பட்டுள்ளதே சரியாகும்.
00

சபீக்கு – தருலாக்கு நெடுஞ்சாலை (Subic–Clark–Tarlac Expressway) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சபீக்கு – தருலாக்கு நெடுஞ்சாலை வெருளி.
பிலிப்பைன்சு விரைவுச்சாலை இணைப்பு வலையில் வி 1(அ), வி4(ஆ) [E1(a) , E4(b)] என கையொப்பமிடப்பட்ட சபீக்கு – தருலாக்கு நெடுஞ்சாலை பிலிப்பைன்சின் மத்திய உலுசோன் (Central Luzon) பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட-நுழைவுரிமை யுடைய சுங்க விரைவுச் சாலையாகும்.
விரைவுச்சாலையில் நிகழும் நேர்ச்சி(விபத்து)களைப்பற்றிய செய்திகளை அறிவோர், விரைவுச்சாலைகளில் செல்வதற்குப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

சப்பான் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சப்பான் வெருளி அல்லது நிப்பான் வெருளி.
சப்பானியத்தில் அந்நாட்டுப் பெயர் நிஃகோன்(Nihon) என்பதாகும். எனினும் நாட்டை நிப்பான் என்றும் அழைக்கின்றனர். எனவேதான் நிப்பான் வெருளி என்றும் அழைக்கின்றனர்.
சப்பான் நாடு, சப்பானிய மொழி, சப்பானியக் கலை, சப்பானியப் பண்பாடு, சப்பானிய வளர்ச்சி, சப்பானியப் பொருள்கள், சப்பானிய வணிகம், சப்பானியர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர் இத்தகையோர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆத்திரேலியா, கொரியா, சீனா, தைவான், பிலிப்பைன் எனப் பல நாடுகளில் அவரவர் நாடு சார்ந்த வளர்ச்சி அடிப்படையிலும் சப்பானிய வெருளி கொண்டவர்களாக உள்ளனர்.
00

சப்பை வட்டை (Flat tire) குறித்த வரம்பற்ற பேரச்சம் சப்பை வட்டை வெருளி.
காற்று இறங்கிய அல்லது காற்று இல்லாத வட்டையைச் சப்பை வட்டை என்று கூறலாம்.. வட்டையை உள்ளடக்கிய சக்கரம் என்றால் சப்பைச் சக்கரம் எனலாம். உடனடியாகப் பயணம் மேற்கொள்ள அல்லது தொடர இயலாமல் போவதால் ஏற்படும் பேரச்சம். கவனிக்காமல் பயணம் மேற்கொண்டிருந்தால் நேர்ச்சி(விபத்து) ஏதும் நிகழ்ந்து உயிரிழப்பு, உடைமை இழப்பு போன்ற இன்னல்களுக்கு ஆளாகியிருப்போமோ என்ற கவலையும் பேரச்சத்தை விளைவிக்கும்.
Flat என்றால் தட்டையான எனப் பொருள். உருள் வடிவிலான சக்கரம் காற்று இறங்குதல் போன்றவற்றால் அடிப்பகுதி தட்டையாகத் தோன்றுவதால் இவ்வாறு ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. ஆனால் தமிழில் தட்டைச்சக்கரம் என்றால் சக்கர வடிவமே தட்டை எனத் தவறாகப் பொருள் வரும். எனவே, சப்பை