(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி)

276. ஆழ்பு வெருளி-Bathophobia

ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி

ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம்.

மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள், தாழ்வான குகை,  ஆழமான கிணறு அல்லது பிற நீர்நிலைகள் முதலியவை தொடர்பான பேரச்சம் கொள்வர்.

bathos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஆழம்.

00

277. ஆளுநர் வெருளி – Prefeciphobia

ஆளுநர் மீதான பேரச்சம் ஆளுநர் வெருளி.

சில நேர்வுகளில் ஆளுநர் மீதான பேரச்சம், பொதுமக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும்ஆட்சிப்பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுகிறது. ஆளுநர்கள் முறையாகவோ தவறாகவோ நடவடிக்கை எடுப்பது குறித்த பேரச்சமே வெருளியாகிறது.

இப்போது ஒன்றியத்தில பாசக கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பாசக ஆட்சி இல்லா மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு அன்றாடப் பணிகளில் தலையீடு, மாநிலக் கொள்கைகளில் குறுக்கீடு, ஆட்சி நிலைப்பின்மை குறித்த அச்சுறுத்தல் போன்ற வற்றில் ஈடுபடுகிறது. என்னதால் இதற்கு அஞ்சிவில்லை என மாநில ஆட்சியாளர்கள் சொன்னாலும் அச்சம் கொண்டு ஆளுநர் வெருளிக்கு ஆளாகிறார்கள்.

00

278. ஆள்வோர் வெருளி – Regnatophobia

ஆள்வோர்கள் மீதான பேரச்சம் ஆள்வோர் வெருளி.

ஆள்வோரின் அடக்குமுறை, அளவுகடந்த வரிவிதிப்பு, குறைகளைக் களையாமை, இயல்பான இடர்ப்பாடுகள், திடீரென நேரும் பேரிடர்கள் முதலியவற்றில் இருந்து காக்காமை, வேலைவாய்ப்போ தொழில் வாய்ப்போ வழங்காமை, கொடுங்கோலாட்சி  முதலியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பேரச்சமே  ஆள்வோர் வெருளியாகிறது. 

மக்களாட்சி நாட்டிலேயே மக்களுக்கு ஆள்வோர் வெருளி இருக்கும்பொழுது வல்லாட்சி நாட்டில் ஆள்வோர் வெருளி இருப்பது இயற்கையே.

00

279. ஆறாம் எண் வெருளி – Ektophobia  

ஆறாம் எண்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆறாம் எண்கள் வெருளி.

ஆறாம் எண்காரர்களுக்கு உரியதாகச் சொல்லப்படும் சாப்பாட்டுப் பெருவிருப்பம், உடல் பருமன் சிக்கல், நெஞ்சு வலிக்கான வாய்ப்பு, இரத்த ஓட்டக்கோளாறுகள், பிறப்புறுப்புக் கோளாறுகள் முதலான எதிர்மறைக் குறிப்புகளைப்பார்த்து அச்சம் கொள்வர்.

சாப்பாட்டுப் பிரியர்கள், உடல் பருமன் சிக்கல், நெஞ்சு வலிக்கான தேர்வு எண் 6 ஆக இருந்து அதில் தோல்வியுற்றால் 6 ஆம் எண் வீட்டில் குடிபுகுந்த பின்னர் துன்பங்களைச் சந்தித்தால் எண் 6 குறித்த அச்சம் மேலும் வளர்கிறது.

தேர்வு எண் 6 ஆக இருந்து அதில் தோல்வியுற்றால் 6 ஆம் எண் வீட்டில் குடிபுகுந்த பின்னர் துன்பங்களைச் சந்தித்தால் எண் 6 குறித்த அச்சம் மேலும் வளர்கிறது.

6,15,24 ஆம் நாள்களில் பிறந்தவர்கள் ஆறாம் எண்காரர்கள்.இவர்களுக்குக் காதல் நாட்டம், ஆடம்பர விருப்பம் முதலியன உண்டு என்பர். எனவே, காதல் வெறுப்பும் ஆடம்பர எதிர்ப்பும் உள்ளர்கள் இவ்வெண் கண்டு அஞ்சுவர். ஆறாம் எண்ணில் பிறந்த மகளோ மகனோ காதலில் ஈடுபடுவார்கள் என்ற கவலை கொள்ளும் அவர்களின் பெற்றோர்களும் 6 ஆம் எண்மீது பேரச்சம் கொள்வர்.

00

280. ஆறு கொடி வெருளி –  Sixflagsphobia

ஆறு கொடி கேளிக்கை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆறு கொடி வெருளி.

ஆறு கொடிகள் கேளிக்கைப் பூங்கா(Six Flags Theme Park) என்பதன் சுருக்கமே ஆறு கொடிகள் எனப்பெறுகிறது.

ஆறுகொடி கேளிக்கைப் பூங்காவில் உள்ள நெடும்படகு(roller coaster) இவரி(சவாரி) பிற தீவிர இவரிகள் மீதான பேரச்சமே இப்பூங்கா குறித்த பேரச்சமாகிறது.

00