(வெருளி நோய்கள் 331 – 335 : தொடர்ச்சி)

336. இருகாட்சி வெருளி – Diplophobia

காண்பது இரட்டையாகத் தெரிவது குறித்த பேரச்சம் இருகாட்சி வெருளி.

பெரியவர்கள் தங்களுக்கு இரண்டு இரண்டு உருவமாகத் தெரிவதாகக் கூறும் பொழுது அதைக்கேட்கும் சிறுவர்கள் தங்களுக்கும் அவ்வாறு தெரிவதாகக் கருதிப் பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். நாளடைவில் இப்பேரச்சம் வளர்ந்து வெருளியாக மாறும்.

diplos என்றால் இரட்டை எனப் பொருள்.

00

337. இருபடிச் சமன்பாட்டு வெருளி-Quadrataphobia

இருபடிச்சமன்பாடு குறித்த அளவுகடந்த பேரச்சம் இருபடிச்சமன்பாட்டு வெருளி.

Quadrata என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருபடி.

00

 338. இருபால் உறவு வெருளி – Biphobia

இருபால் உறவு பற்றிய காரணமற்ற பேரச்சம் இருபால் உறவு வெருளி.

இருபாலீர்ப்பு (Bisexuality) என்பதனையே அதன் சுருக்க வடிவமான  Bi குறிக்கிறது.

ஆண் ்அல்லது பெண்ணிற்குத் தற்பாலுடனும் எதிர்பாலுடனும் என இரு பாலினருடனும் ஏற்படும் ஈர்ப்பு அல்லது உறவு.

தற்பாலுறவு வெருளி உள்ளவர்களுக்கும் உறவு வெருளி உள்ளவர்களுக்கும் இரு பாலுறவு வெருளி வருவது இயற்கை.

00

339. இருப்பின்மை வெருளி-Destirpephobia

தேடும் அல்லது தேவைப்படும் பொருள் இருப்பில் இல்லை என்பது தொடர்பான அளவு கடந்த பேரச்சம் இருப்பின்மை வெருளி.

தேவைப்படும் பொருள் ஒன்று இருப்பில் இல்லை என்னும் பொழுது அதனால் மேற்காெள்ள திட்டமிட்டுள்ள செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமைக்கும் அதனால் விளையும் பயன் இன்மைக்கும் பெருங்கவலையும் பேரச்சமும் கொண்டு இவ்வெருளி வருகிறது.

stirpe என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருப்பு.  Destirpe என்றால் இருப்பின்மை.

00

340. இருப்பு அகநிலை வெருளி – Pnevmaphobia

இருப்பு அகநிலை(spiritual plane of existence) குறித்த வரம்பற்ற பேரச்சம் இருப்பு அகநிலை வெருளி.

Pnevma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆன்மா/ஆதன்.

00

(தொடரும்)