(வெருளி நோய்கள் 604-608: தொடர்ச்சி)

சிலருக்குக் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் மீது தேவையற்ற அச்சம் ஏற்படும். இதுவே கடிகாரவெருளி.

கடிகாரம் காலம் காட்டும் கருவி. குறித்த நேரத்தில் வேலையைச் செய்ய வேண்டும், செய்து முடிக்க  வேண்டும் என்பதை நேரம்காட்டி உணர்த்துவது கடிகாரம். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தும் பொழுதும் உரிய காலத்தில் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுவதும் கடிகாரம்தான். இதனால் சிலர் கடிகாரம் காலமுடிவை – இறப்பை உணர்த்துவதாக எண்ணி அஞ்சுவதும் உண்டு.

chrono என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம். ment  என்னும் இலத்தீன் சொல்லிற்கு வழிமுறை எனப் பொருள்.

Roloi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கடிகாரம் எனப் பொருள்.

00

கடினப் பொருள்கள் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் கடினப் பொருள் வெருளி.

இதனை வன்பொருள் வெருளி என்று சொன்னால், இப்போது தவறுதலாகக் கணிணி துறையில் கருவியத்தை(Hard ware) வன்பொருள் என்தால் குழப்பம் வரும்.

00

ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடுகதி வெருளி.

கடுகதி=high speed, மிகு வேகம்.

(வே > வேகு >)வேகம் தமிழ்ச்சொல்லே!

00

கடுகு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கடுகு வெருளி.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்டது கடுகு. எனவேதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றனர்.  கடுகைமிகுதியாகப் பயன்படுத்துவதால் வரும் சில தீமைகளை எண்ணிக்கடுகு மீது தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

கடைசி எழுத்து வரிசையைக் கொண்டு தொடங்கும் சொல் மீதான அளவுகடந்த பேரச்சம் கடைசி எழுத்து அடுக்குத் தொடக்க வெருளி > கடைசி எழுத்து வெருளி.

Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.

தமிழில் கடைசி எழுத்தான ‘ன்’ சொல்லின் முதல் எழுத்தாக வராது. எனவே, சிக்கல் இல்லை. ஆங்கிலத்தில் கடைசி எழுத்தான  என்பதைக் கொண்டு Zzzz  எனத் தொடங்கும் சில சொற்கள் உள்ளன. Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். கடைசி எழுத்து முதல் எழுத்தாகத் தொடங்கக்கூடிய சொற்கள் உள்ள மொழியினருக்கும் இவ்வெருளி வரலாம்.

யாரோ ஒருவருக்கோ இருவருக்கோ இத்தகைய பேரச்சம் வந்திருக்கலாம். எனினும் இதை ஒரு வகைப்பாட்டாகச் சேர்த்துள்ளனர்.

00

(தொடரும்)