(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி)

நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும்.  எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும்.

நாளைக்குத் தொடக்கம்

இன்றைக்குத் தேர்வு

நேற்றைக்குப் பார்த்தது

தொடக்கத்திற்குப் பின்னர்

முடிவிற்குப் பிறகு

நாளைக்குத் திறப்பு விழா

நாளைக்குத் தொடங்கியதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குப் பாடம் எடு

நாளைக்குப் பிறந்த நாள்

நாளைக்குச் சென்றதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குத் திருமணம்

நாளைக்குப் பதியவும்

நாளைக்குக் கொடுக்கவும்

இன்றைக்குப் படித்த பின்னர்

இன்றைக்குப் படியெடுக்கவும்

இன்றைக்குப் போ

இன்றைக்குப் புகுவிழா

இன்றைக்குத் திரையிடுக

இன்றைக்குக் கல்லூரி விடுமுறை

இன்றைக்குப் பள்ளி விடுமுறை

இன்றைக்குச் சட்ட மன்றத்தில்

இன்றைக்குச் சட்டப் பேரவையில்

இன்றைக்குப் பேய்மழை

நேற்றைக்குக் கடும் வெயில்

நேற்றைக்குக் கோயிலில்

நேற்றைக்குப் பெய்த மழையில்

நேற்றைக்குச் சூழல்

நேற்றைக்குத் தொடங்கியதும்

நேற்றைக்குப் பிரித்தனர்

நேற்றைக்குப் பேறுகாலம் முடிந்ததும்

நேற்றைக்குக் காவல் நிலையத்தில்

நேற்றைக்குப் பெற்றோர் சந்திப்பில்

நேற்றைக்குத் துணிக்கடையில்

நேற்றைக்குக் கையூட்டு பெற்றதால்..

நேற்றைக்குக் கரம் பிடித்தவர்

தொடக்கத்திற்குப் பின்னர்

தொடக்கத்திற்குச் செல்க

முடிவிற்குப் பிறகு

முடிவிற்குப் பிறகும்

இவ்வாறு வல்லெழுத்து மிகும் இடங்களை அறிந்தால் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இயலும்.