சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26:
தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க!
“மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ”
தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புறநானூறு 190 ஆவது பாடல்
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக் கொண்டுவந்து சிறிய இடத்தில் உணவாகச் சேகரிப்பது எலியின் பழக்கம்.
எலி போன்று நன் முயற்சி இல்லாமல் பெறுகின்ற செல்வத்தையும் பிறருக்குப் பயன்படாத வகையில் இறுகப்பற்றி வைத்திருப்போருடன் நட்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தன்னால் தாக்கப்பட்ட கொடும்பார்வையுடைய பன்றி இடப்பக்கம் விழுந்தது என, அதை உண்ணாத புலி குகையில் தனித்திருந்து மறுநாள் முயற்சியுடன் வேட்டைக்குச் சென்று யானையைத் தாக்கி உண்ணும் புலிபோல் தளரா உள்ளமுடையவர்களோடு நட்பு கொள்க.
எனவே, எலி போன்ற தன்னலமுடையார் நட்பைக் கைவிடுக என்றும் புலிபோல் முயற்சியும் வலியமையும் உடையவர் நட்பை மேற்கொள்க என்கிறார் பாடலியற்றிய மன்னர் சோழன் நல்லுருத்திரன்.
மேற்குறித்த பாடலடிகள் இடம்பெற்ற முழுப்பாடல் வருமாறு:
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ; (5)
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து (10 )
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.
பதவுரை:
விளை பதம் = விளைகின்ற பருவம்; சீறிடம் = சிறிய இடம்; வளைகதிர் = வளைந்த நெற்கதிர்; வல்சி = உணவு; அளை = வளை; மல்கல் = நிறைதல்;
எலிமுயன் றனைய ராகி = எலி போன்ற சிறு முயற்சி உடையவராகி;
உறுத்தல் = இருத்தல்; கேண்மை = நட்பு; கேழல் = பன்றி; அவண் = அவ்விடம், அவ்விதம்; வழிநாள் = மறுநாள்; விடர் = குகை; புலம்பு = தனிமை;
வேட்டு = விரும்பி; இரு = பெரிய; களிறு = (ஆண்) யானை ; ஒருத்தல் = புலி,
உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை முதலிய ஒரு சார் ஆண் விலங்குகளுக்குப் பொதுப்பெயர்; நல் வலம்படுக்கும் = நன்கு வலப்புறம் வீழும்;
புலிபசித் தன்ன = அதை உண்ணும் பசியுடைய புலிபோல்; மெலிவில் = தளர்ச்சி யில்லாத; உரனுடை யாளர் = வலிமை உடைய; கேண்மை = நட்பு; வைகல் = நாள்.
தன்னால் தாக்கப்படும் விலங்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்னும் கருத்து சங்கக் காலத்தில் நிலவியது.
அகநானூறு 29 ஆம் பாடலிலும் இது இடம்படின்,
வீழ்களிறு மிசையாப் புலி
என்னும் பாடலடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேண்மை என்பது உறவுபோல் அமையும் நட்பு. இந்நட்பு யாருடன் இருக்க வேண்டும்; யாருடன் இருக்கக் கூடாது என்று அரசர் கூறுகிறார்.
எலி போன்றோரிடம் இருக்கக் கூடாது என்றும் புலி போன்றோரிடம் இருக்க வேண்டும் என்றும் அரசர் வலியுறுத்துகிறார்.
எலி தானாக முயற்சி மேற்கொண்டு உணவை அடையாமல், உழவர்கள் உழைப்பில் விளைந்த நெற்பயிரைத் திருடிச் செல்வதால் இதனைத் தவிர்க்க வேண்டிய சிறு முயற்சியாக மன்னர் கூறுகிறார்.
இத்தகைய சிறு முயற்சி கூடாது என்றும் அறிவுரை தருகிறார்.
புலி தனக்கு உணவு கிடைத்தாலும் அவ்வுணவு இடப்பக்கம் வீழந்தமையால் பசியையும் பொருட்படுத்தாமல் அதனை உட் கொள்ளவில்லை.
மறுநாள் மீண்டும் முயற்சி மேற்கொண்டு வேட்டையாடி யானையைக் கொன்று தன் உணவைப் பெற்றுள்ளது.
இதனைச் சிறப்பான முயற்சியாக மன்னர் கூறுகிறார்.
எனவேதான், எலிபோல் சிறிய முயற்சி உடையார் நட்பைக் கைவிடுமாறும் புலிபோல் சீரிய முயற்சியுடையார் நட்பைநாளும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மன்னர் கூறுகிறார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
“மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ”
தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புறநானூறு 190 வது பாடல்

தாய், நவம்பர் 27, 2025

Leave a Reply