(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – தொடர்ச்சி)

கன்னடச் சொற்களைப் பார்ததால் ஆராயாமலேயே அவை தமிழ் அல்லது தமிழில் இருந்து மாற்றம் பெற்றவை எனலாம். எனவே, கன்னடத்தின் தாய் தமிழ் என்பது சொல்லாமலே விளங்கும்.

அச்சொற்கள் சிலவற்றைப் பின்வருமாறு பார்ப்போம்

ஆடை அணிப் பெயர்கள், இடப்பெயர்கள், உறவுப்பெயர்கள், ஐம்பூதப் பெயர்கள், கருவிப்பெயர்கள், கனிமப்பெயர்கள், காலப் பெயர்கள், சினைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், நிறப்பெயர்கள், பறவைப்பெயர்கள், விலங்குப் பெயர்கள், நீர்வாழ்வனவற்றின் பெயர்கள், ஊர்வனவற்றின் பெயர்கள், பூச்சிகளின் பெயர்கள், மரம் செடி கொடிகளின் பெயர்கள் என்று நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் பெரும்பாலானவை தமிழாக அல்லது சிதைந்த தமிழாக அல்லது பேச்சுத் தமிழாக உள்ளமையை உணரலாம். ஆயிரம் கன்னடச் சொற்கள், தமிழ்-கன்னடச் சொற்கள், கன்னடம் – தமிழ்ச்சொற்கள் என்ற வகையில் இணையத்தில் நாம் பார்த்தால் இவை எளிதில் புரியும். எனினும் சான்றிற்காக அவற்றில் சிறு பகுதியைப் பின்வருமாறு அறியலாம்.

இகரம் எகராமாக மாறுதல், ‘ப’ வரிசைச் சொற்கள் ஃக(ha) வரிசைச் சொற்களாக மாறுதல், இறுதி மெய்யெழுத்து மறைதல், இறுதி எழுத்து எகராமாக மாறுதல், இறுதி எழுத்து உகரம் ஏறி வருதல், தமிழ்ப் பேச்சு வழக்காக மாறுதல் முதலிய காரணங்களால் கன்னடமாக மாறியுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அகத்தி  – அகசெ

அகத்தி –  அகசெ

அகப்பை – அகப்பெ

அகம்  – ஆகெ

அகழி –  அகழ்

அக்கம்(தானியம்)  – அக்கி

அக்கா – அக்கா/ அக்க

அங்காடி-  அங்காடி

அடம்பு – அடும்பு

அடவி –  அடவி

அடி -அடி

அடைக்காய்  -அடிகே

அடைப்பம் – அடப்ப

அட்டிகை  – அட்டிகெ

அட்டை – அட்டெ

அணல் (தாடி) –  அணல்

அணில் –  அலிலு

அணை  – அணெ

அணைக்கட்டு – அணெக்கட்டு

அண்டை  – அண்டெ

அண்ணன் – அண்ண

அத்தன்- அச்சன் –  அச்ச

அத்தி – அத்தி

அத்தை – அத்தெ

அந்தி – அந்து

அப்பம் –   அப்ப

அப்பளம் – அப்பள

அப்பன் –  அப்ப

அம்பலம்  – அம்பல

அம்பாரி –  அம்பாரி

அம்பி – அம்பி

அம்பு  – அம்பு

அம்மணி  – அம்மண்ணி

அம்மி – அம்மி

அம்மை  – அம்ம

அம்மை –  அம்ம

அரசு –  அரசு

அரண்மனை  – அரமனெ

அரத்தம்/இரத்தம் –  ரத்த

அரம்   – அர

அரிசி –  அக்கி

அருகு   – அருகு

அலர்-  அலர்

அல்ல – அல்ல

அவரது –  அவர

அவரை –  அவரெ

அவரை  அவரெ

அவர் – அவரு

அவர்களது-  அவர

அவர்கள் – அவரு

அவல் –  அவல்

அவள்-  அவளு

அவனது –  அவன

அவன்  – அவனு

அவன் – அவனு

அளை(தயிர்) –   அள

அறை – அறெ

ஆகாயம் –  ஆகாசம்

ஆடாதோடை –   ஆட்சோகெ

ஆண்டி  – ஆண்டி

ஆதனை – ஆதலு

ஆதனை – ஆதலு

ஆந்தை – ஆந்தெக

ஆப்பு –  ஆபு

ஆமை – ஆமெ

ஆம்பல் –  ஆபல்

ஆம்பல் – ஆபல்

ஆர் – ஆரெ

ஆல் –  ஆல

ஆள்  ஆளு

ஆனை  நெருஞ்சி  – ஆனெ நெக்குலு

இடம் – இடெ

இடுக்கி – இடுக்களள்

இடுக்கு – இடுகு

இடை / நடு –  நடு

இட்டலி –  இட்டலி

இண்டை – இண்டெ

இதழ் – எசன்

இமை –  எமெ

இரவு –  இருள்

இராத்திரி –  ராத்ரி

இரை – எரெ

இலந்தை -எலச்சி

இலுப்பை –  இலுப்பெ

இலை  – எலெ

இல்லை  – இல்ல

இல்லை –  இல்லா

இளநீர்-   எளநீரு

இறகு – எறகெ

இறக்கை – ரெக்கெ

ஈசல்    – ஈச்சல்

ஈட்டி – ஈட்டி

ஈருள்ளி  – ஈருள்ளி

ஈர் –  ஈர்

உகிர் –  உகுர்

உக்களம் – உக்கட

உச்சி – உச்சி

உடுப்பு  -உடுப்பு

உடை – உடெ

உண்டி – உண்ணி

உதடு – ஒதடு

உப்பு – உப்பு

உமி  – உம்மி

உம்பளம் –  உம்பளி

உருக்கு  – உர்க்கு

உரைகல் – ஒரகல்

உலக்கை  ஒலக்கெ

உலை(சூளை)   ஒலெ

உழுந்து –  உத்து

உளி – உளி

உறி – உறி

ஊட்டம்   – ஊட்ட

ஊட்டு   – ஊட்ட

ஊமை –  ஊமெ

ஊர்  –   ஊரு

ஊர்தி – உர்தி

ஊற்று  – ஊட்டெ

எச்சில் – எஞ்சல்

எண்ணெய்  – எண்ணெ

எருது – எத்தெ

எருமை  – எம்மே

எலுமிச்சை –  எலிமிச்சை

எலும்பு  – எலுபு

எல்லா –  எல்லா

எல்லை – எல்லெ

எள்  – எள்

என் – நன்ன

ஏதோ –  ஏனோ

ஏரி –  ஏரி

ஐயன்  – அய்ய

ஒடு – ஒடு

ஒட்டை –  ஒட்டெ

ஒரல் – உரல்

ஒளவை / அவ்வை – அவ்வ

ஓடம் –  ஓட

ஓடு –  ஓடு

ஓலை – ஓல

ஓலைக்காரன் –  ஓலெகார

கஞ்சி –  கஞ்சி

கடம்பை  – கடம்ப

கடல் – கடல்

கடிகாரம்  – கடியாரா

கட்டடம் – கட்டட

கட்டி –  கட்டி

கணவன் – கண்ட

கண் – கண்ணு

கதிர் – கதிர்

கத்தி –  கத்தி

கரடி   –   கரடி

கரி –  கரி

கரும்பு  – கப்பு

கரை  – கரெ

கலம்  – கல

கவண் – கவணெ

கவல் – கவை

கழல்  – கழல்

கழனி  – கழனி

கழுதை  – கத்தை/கத்தெ

கழுத்து  – கத்து

களை – களெ

கள்  – கள்

கள்ளி – கள்ளி

கறி – கறி

கறுப்பு – கப்பு

கனம் – கன

கன்று – கறு

கன்னம்   – கன்ன

கா – கா

காக்கை – காகெ

காடு –  காடு

காட்டு மல்லிகை  – காடு மல்லிகெ

காணி – காணி

காம்பு  – காவு

காய் – காய்

கால்  – காலு

கால் – கால்

கால்(காற்று)  காலி

காவல்காரன்  காவலுகார

கிட்டி  – கிட்டி

கிளி  – கிளி

கிளை / கொம்பு  – கொம்பெ

கிணி – கினி

கீரை  – கீரெ

குச்சு – குச்சு

குடம் –  குட

குடி –  குடி

குடிசை  – குடிச

குடும்பம் –  குடும்ப

குண்டி –  குண்டெ

குதி –  குதி

குதிரை –  குதுரெ

குப்பி –   குப்பி

குயில் –  குகில்

குருடன் – குருட

குலை  – கொலை

குழல்  – கொழல்

குழி   – குணி

குழி – குழி

குளம் – கொள

குளம்பு  -கொளக

குளவி  – குளவி

குன்றம்  – குட்ட

கூகை  – கூகெ

கூடாரம் – கூடாரம்

கூடை  – கூடெ

கூந்தல்  – கூதல்

கூழ்  – கூழ்

கூனி  – கூனி

கெட்ட  – கெட்ட

கெட்டது  – கெட்டது

கொக்கி  – கொக்கெ

கொக்கு – கொக்கரெ

கொட்டகை -கொட்டகெ

கொட்டாரம் – கொட்டார

கொட்டை  – கொட்டெ

கொண்டை  – கொண்டெ

கொத்தளம்  – கொத்தள

கொத்து  – கொத்து

கொத்துமல்லி – கொத்துமி

கொப்பு  -கொப்பு

கொம்பு – கொம்பு

கொல்  கொல்லு 

கொழுப்பு  – கொப்பு

கொன்றை  – கொன்னெ

கேணி  – கேணி

கேள் – கேளு

கோடரி  – கோடலி

கோடை –   கோடெ

கோட்டை –  கோடடெ

கோதுமை  – கோதி

கோல்  – கோல்

கோழி –  கோலி

கோனை  – கோனெ

கை  – கெய்

சட்டி  – சட்டி

சட்டுவம்  – சட்டுக

சட்டை – சட்டெ

சணல்  –  சணபு

சண்பகம்  – சம்பகி

சப்பாத்திக் கள்ளி – சப்பாத்திக் கள்ளி

சமயம்  – சமய

சல்லடை  – சல்லடி

சாடி  – (ஞ்)சாடி

சாட்டை – சாட்டி

சாமை  – சாமெ

சாயங்காலம்  – சாயங்கால

சில்லி  – சில்லி

சிறுத்தை  – சிறத்தெ

சிறை –  செரெ

சீத்தா – சீத்தா

சீப்பு  – சீப்பு

சீமை –  சீமெ

சுடுகாடு  –  சுடகாடு

சுறா – சொற