க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்

(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
க௬. தமிழர் செய்ய வேண்டுவன?
க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல்.
உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
செய்தல்
௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம்
நடத்தல்.
௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல்.
ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம்
நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர்
பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன்
தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக்
கொள்ளக் கூடாதென்று தமிழக அரசை
வற்புறுத்தல்.
௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம்
வெளியேற்றுமாறும், இனி எவரையும்
தமிழ்நாட்டில் குடியமர விடக் கூடாதென்றும்
தமிழக அரசை வலியுறுத்திப் போராடல்.
எ. தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை மேல்குடியினர் வாழுமிடங்களிலும், கோவில்களின் சுற்றுச் சுவர்களிடையிலும் குடியமர்த்துமாறு புரட்சி செய்தல்.
அ. கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை (பொன், வெள்ளிநகைகள்) எல்லாம் எடுத்து நாட்டுநலத்திட்டங்கட்குப் பயன்படுத்துமாறு அரசை வற்புறுத்தல்.
௯. தமிழ்நாட்டுக் கோவில்களில் பூசார்த்திகளாக
எல்லாத் தமிழர்களையும் அமர்த்துமாறு
நடுவணரசை வற்புறுத்த கோவில்களின் முன்
மறியல் போராட்டம் நடத்தல்.
க0. தமிழகத்திலுள்ள வானொலி, வானொளி
நிலையங்களுக்கு முன் தமிழ்க் கொலை
செய்யாதே! சீர்திருத்தம் பற்றிப் பேச வாய்ப்பு
கொடு என்று மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல்.
கக. தமிழகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு
மக்களவை, மாநிலங்களவைக்குச் செல்லும்
உறுப்பினர் தமிழில்தான் பேச வேண்டுமென்று
வற்புறுத்தி கிளர்ச்சி செய்தல்.
கஉ. தமிழ்நாட்டில் விளையும் எல்லாப்
பொருள்களையும் தமிழ்நாட்டு மக்கட்கே
பயன்படுத்துதல் வேண்டும். எஞ்சிய
பொருள்களை மட்டுமே அயல்நாடுகட்கு
அனுப்புதல் வேண்டுமென்று அரசை
வற்புறுத்தி மறியல் செய்தல்.
க௩. வட்டிக்கடைகளும், வட்டிக்குப் பணங்
கொடுப்பவரும் அரசு விதித்துள்ள
முறைப்படியே வட்டி வாங்குதல் வேண்டும்.
அதிகமாக வாங்குபவர் மீது அரசு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று
வற்புறுத்தி மறியல் செய்தல்.
க௪. இருப்பூர்தித்துறை, அஞ்சல்துறை, வருமான
வரித்துறை, சுங்கத்துறை முதலிய
நடுவணரசின் ஆளுமையில்
உள்ளவற்றையெல்லாம் தமிழக
அரசிடம்விட்டுவிடுமாறு நடுவணரசை வலியுறுத்த
மறியல் போராட்டம் நடத்தல்.
கரு. தமிழ்நாட்டிலுள்ள கனிமங்களையும்,
அவை சார்பான நிறுவனங்களையும் தமிழக
அரசிடமே ஒப்படைக்குமாறு நடுவணரசை
வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தல்.
க௬. “வெள்ளையனே வெளியேறு” என்று முன்
சொன்னபடி இன்று ‘வடவனே வெளியேறு’
என்று குரலெழுப்பல். வடவர் வாழும்
இடங்களின் முன்னும் வடவர் தொழிலகம்
முன்னும் மறியல் செய்தல்.
கஎ. தமிழக அலுவலகங்களில் அயலாரை
அமர்த்தக் கூடாதென்று புரட்சி செய்தல்.
கஅ. இந்தியா விடுதலை பெற்றுவிட்டதென்று
பெருமையடித்துக் கொள்ளும் வடவர்,
தமிழ்நாட்டை ஆண்டான் அடிமை நிலையில்
வைத்திருப்பதை எதிர்த்துப் போராடல். இது
நம் பிறப்புரிமை.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை







Leave a Reply