வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 594-598
594. கடமான் வெருளி-Alkiphobia
கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி.
அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது.
00
595. கடமை வெருளி-Paralipophobia
கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி.
தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி நிற்பதும் தன்னம்பிக்கையின்றி அக்கடமையை விலக்கி வைப்பதும் பொறுப்பைத் தவறவிடுவது அல்லது தவற விட நேரிடுவது குறித்துக் கலைப்படுவதும் சிலரின் பழக்கம்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்னும் ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் வரும் வாலியின் பாடலில்
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
………… …………….. …………
கடமை அது கடமை
கடமை அது கடமை
என வரும். இவ்வாறு கடமை உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மாறாகக் கடமை தவறுவோரும் உள்ளனர்.
பொறுப்புவெருளி(Hypegiaphobia/Hypengyophobia)யும் இத்தகையதே!
00
596. கடலுயிரி வெருளி-Thalassophobia
கடல் உயிரிகளைப் பற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கடலுயிரி வெருளி.
கிரேக்கத்தில் thalassa என்பது கடலைக் குறிக்கும் சொல். இங்கே கடல்வாழ் உயிரிகளையும் குறிக்கிறது.
00
597. கடல் நண்டு வெருளி – Astakophobia
கடல் நண்டு மீதான அளவுகடந்த பேரச்சம் கடல் நண்டு வெருளி.
இயல்பான நண்டுகள்மீது அச்சம் கொள்ளாதவர்களுக்கும் கடல் நண்டுகள் மீது பேரச்சம் வருவதுண்டு.
காண்க: நண்டு வெருளி(Kavouriphobia/Kabourophobia)
00
598. கடல் வானூர்தி வெருளி – Sheijiphobia
கடல் வானூர்தி(seaplane) மீதான அளவு கடந்த பேரச்சம் கடல் வானூர்தி வெருளி.
கடல் பயணங்கள் குறித்தும் வான் பயணங்கள் குறித்தும் பேரச்சம் உள்ளவர்களுக்குக் கடல் வானூர்திமீதும் பேரச்சம் வருகிறது. வானூர்தி நேர்ச்சி நேர்ந்தால் மண்ணில் விழுந்து பிழைக்க வாய்ப்புள்ளது. கடலில் விழுந்தால் பிழைக்க வாய்ப்பில்லையே எனக் கவலைப்பட்டு அச்சம் கொள்வோரும் உள்ளனர். நம்பிக்கையுடனும்மகிழ்ச்சியுடனும் பயணம் மேற்கொண்டால் பேரச்சத்திற்கு வாய்ப்பில்லை.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply