(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி)

  1. தீபாவளி போன்ற பண்டிகைகள் தமிழர்க்கு எதிராகக் கூறப்படுவதாலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாதனவாய் உள்ளதாலும் பகுத்தறிவுவாதிகளும் தமிழ் உணா்வாளர்களும் இவற்றிற்கு எதிராகவே பேசி வந்தனர், வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் இத்தகைய பண்டிகைகளுக்கு எங்ஙனம் வாழ்த்து கூறுவர்?

இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்:

“இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்:

சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ  இந்துக்களையா….?

அதே சிவராத்திரிக்கும்  பிள்ளையார் சதுர்த்திக்கும்  வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….?

அல்லது

இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….?

மேற்கண்ட இவை எதையுமே எப்போதும் கண்டு கொள்ளாத சைவ மடங்களின் அதிபதிகளையா…?

அல்லது பங்குனி உத்திரத்திற்கும் தைப் பூசத்திற்கும் எப்போதும்  வாழ்த்தே  சொல்லாத மேற்கண்ட அனைவரையுமா..?”

இந்து மதத்தின் உட்பிரிவுகளிலேயே ஒரு பிரிவினர் கொண்டாடும் பண்டிகைகளுக்குப் பிற பிரிவினர் வாழ்த்து கூறுவது இல்லையே அவர்கள் இந்துமதப்பகைவா்களா எனக் கேட்பது சரிதானே. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் அல்லர். இந்து மதம் தூயதாக இருக்கவேண்டும் என்று கருதுபவர்களும் எம்மதமாயினும் மக்களை மக்களாக மதிக்க வேண்டும் என்று கருதுபவர்களும்தான்.

இராமாயண முதன்மைப் பாத்திரங்களே சிறப்பாக விவரிக்கப்படவில்லை.

  • இராமனைத் தசரதன் மகன் என்று சொல்லாமல் கோசலையின் மகன் என்கிறார் வால்மீகி. பிற இடங்களிலும் தாயின் மக்களாகத்தான் உடன் பிறந்தோர் கூறப்படுகின்றனர். குழந்தை பிறந்தவுடன் தந்தை இறந்தாலும் அல்லது குழந்தை கருவாக வயிற்றில் இருக்கும் பொழுதே தந்தை இறந்தாலும் அவனின் மகனாகக் கூறுவதுதான் உலக வழக்கம். ஆனால், வால்மீகி இவ்வாறு கூறாததற்குக் காரணம் அவரது மனச்சான்று இடம் தராமையே ஆகும். இந்நால்வரும் எவ்வாறு பிறந்தார்கள் என்பதை வால்மீகியே கூறுகின்றார்.  வேள்வி நடத்தி, அதுபோழ்து குதிரைகளுடன் பட்டத்தரசிகளை உறவு கொள்ள இசைகிறான்.

“ஓ குதிரையே! உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும்” என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் …  …

மக்களைப்போலவே, இராச குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்திர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்… “ஏ… இராசா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் அரசிகளையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.

அதன்படியே முதல் நாள் இரவு குதிரையுடன் உறவு கொண்டவர்கள்  மறு நாள் இரவு வேள்வி  நடத்திய பிராமணர்களுடன் இருக்கிறார்கள்.

வேள்வியில் நியமிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர்களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஃகோதா, அதர்வயூ, உக்குதாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்டத்தரசிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.

கணவனே தன் மனைவிகளைக் குதிரைகளுடனும் வேறு ஆட்களுடனும் உறவு கொள்ள வைத்துக் குழந்தைகள் பெற வைக்கிறான் என்பது உயர்ந்த காப்பியமா?

அதே நேரம் அது சனாதனத்தை வெளிப்படுத்துகிறது என்பதும் உண்மைதான். எந்தச் சனாதனத்தை? பிராமணனைத் தவிர பிறரை இழிவுபடுத்தும் சனாதனத்தை. சூத்திரர்கள் என்று ஒரு பிரிவைக் கற்பித்து அப்பிரிவில் உள்ளவர்களை மிகவும் இழிவாக நடத்தும் சனாதனத்தை. எனவேதான் இராமாயணத்தை எதிர்க்க வேண்டியுள்ளது.

  • (தொடரும்)