(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி)

சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96

  • பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். பொய்யான கருத்தை மக்களிடையே பரப்பி உண்மை என நிறுவ முயலும் சனாதனவாதிகளின் செயலைப் புரிந்து கொள்வீர்கள்.

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிரநதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

  • சனாதன கருத்துகளை விரும்பாத நன்கு படித்த ஆரியர்களும் பிறரும் தமிழ், பிராகிருதம் முதலான பிற மொழி இலக்கியங்களில் இருந்து நல்ல கருத்துகளை இடைச்செருகல்களாகச் சேர்த்து உள்ளனர். அத்தகைய நல்ல கருத்துகளைத்தான் ஆரிய நூல்களைச் சிறந்த நூல்களாக் காட்ட மேற்கோள்களாகத் தெரிவித்துப் பரப்புவர். ஆரிய நூல்களில் இல்லாத கருத்துகளையும் இருப்பதாகக் கூறிப் பரப்புவர். இவற்றை எல்லாம் நீக்கிப் பார்த்தால் மனித நேயமற்ற சனாதன நூல்கள் எங்ஙனம் நல்ல கருத்துகளைக் கூறும் என்று எதிர்பார்க்க முடியும்?
  • சமற்கிருதத்திலுள்ள மூத்த இலக்கண நூல் பாணிணி எழுதிய அட்டாத்தியாயி. இதனை இல்லாத கற்பனையான சொற்களை உருவாக்கி எழுதியுள்ளதாக மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் பேரா.முனைவர் ப.மருதநாயகம் ‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் தம் நூலில் எழுதியுள்ளார். அருத்த சாத்திரம் எழுதியதாகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்பதும் கற்பனையே என்கிறார்கள். எனவே, மூலநூலில் இல்லாத சிறப்புகளை இடைச்செருகல்களாகப் புகுத்துவதே ஆரியர்களின் தொடக்கக் காலத்தில் இருந்தே உள்ள உத்தி.

அடுத்து வரும் இரு விடைகள் காண்க.