கவிதை

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி

தலைப்பு-பெண்ணடிமையர், தி.வே.விசயலட்சுமி ; thalaippu_penadimaiyar_thive-visayalatchumi

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்!

  1. கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை

திண்ணமுறக் காப்போம் தெளிந்து.

  1. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர்

மங்கி யழிவரே தாழ்ந்து.

  1. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள்

கண்ணிருந்தும் கண்ணற் றவர்.

  1. இருவர் மனம்ணைந்தால் பெண்ணடிமை எண்ணம்

வருமா? ஆய்ந்துநீ பார்

  1. பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய்

மண்ணாய் மரமாய் மதி.

  1. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப்

போராடி வாழ்பவளே பெண்.

  1. மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை

மக்களாய் எண்ணோம் மதித்து.

  1. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால்

செருப்பாக்கின் சேரும் இழிவு.

09. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் பெண்ணுயர்வை

நின்றே நினைத்து வாழ்.

10.வள்ளுவர் உண்மையைக் கொள்ளுவர் பெண்ணடிமை

தள்ளுவார் சீர் அள்ளுவர்.

 

(படம்-நன்றி : குட்டிச்செய்திகள் / www.kuttynews.com )

 

தி.வே.விசயலட்சுமி ; thi-ve-visayalatsumy

புலவர் திருக்குறள் தி. வே. விசயலட்சுமி 

2 thoughts on “பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி

  • தமிழ்விளம்பி

    வணக்கம். ஒன்பதாம் குறளில் நேரொன்று ஆசிரியத்தளை காணப்படுகிறது – (நினைத்து/ வாழ்). இஃது வெண்பா இலக்கணத்திற்கு ஒவ்வாதது ஆகும்.
    சுட்டியமைக்கு இந்த சிறியேனை மன்னிக்கவும்.
    வாழ்க தமிழ், வளர்க தமிழ்

    Reply
    • தமிழ்விளம்பி

      (9) காட்டும்/ பெண்ணுயர்வை – இங்கும் தளை தட்டுகிறது. தயவு செய்து கவனிக்கவும். சென்ற இடுகையில் மறந்துவிட்டேன்

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *