என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றும் இணைந்து வாழ்வோம்!
(“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.)
உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர்
என்று சேர்ந்து வாழ்வோம் – நாம்
என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த
வீடும், நாடும் கடந்த உலகம்
ஒன்று என்று வாழ்வோம் – நாம்
ஒன்று பட்டு வாழ்வோம்!
நிறமென்ன உருவென்ன
பிறப்பென்ன தொழிலென்ன
எல்லாம் ஒன்று என்போம்
எல்லாம் ஒன்று என்போம்!
பகையில்லை போரில்லை
இழிவில்லை தாழ்வில்லை
என்று இணைந்து வாழ்வோம் – இனி
என்றும் இணைந்து வாழ்வோம்!
புதிய பாடல்கள் இல்லாமல் இருக்கின்ற மெட்டுகளில் ஏன் பாடவேண்டும் எனச் சிலர் எண்ணலாம்.தெரிந்த மெட்டில் தமிழுணர்வுப் பாடல்களைச் சொல்லித் தந்தால் பதிவது எளிதாக இருக்கும். அதன் பின்னர் நாம் புது புது பண்களில் பாடல் சொல்லித் தரலாம்.!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply