(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
2. பொருள் பால்
13.குடி இயல்
அதிகாரம் 101. நன்றி இல் செல்வம்
பெற்றவர்க்கும், மற்றவர்க்கும் நன்மையால்
உற்றதுணை ஆகாத பெரும்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள், அஃ(து)உண்ணான்,
செத்தான்; செயக்கிடந்த(து) இல்.
இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான்,
எப்பயன் இல்லான்; செத்தான்தான்.
“பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும்,
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
“செல்வத்தால் எல்லாம் ஆகும்”என,
மயங்கும் கருமி, சிறப்புறான்.
ஈட்டம் ...