image-54034

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள், கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழ் விருது வழங்கப் பெறும். இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். விருதிற்காகத் தொண்டாற்றவில்லை ...
image-54025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 conference, seminar, symposium – தமிழில் . . . ?  ‘Consultation’, ‘discussion', ‘Conference' என்பனவற்றிற்கு என்ன சொல்ல வேண்டும்? Consultation என்பதற்குச் சரியான பழந்தமிழ்ச் சொல் சூழ்ச்சி என்பதாகும். இருப்பினும் ...
image-54019

வெருளி நோய்கள் 471-475 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 471-475 ஊர்தி விற்பனையாளர் வெருளி – Autopolitiphobia ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.00 ஊர்தி ...
image-53972

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3 ? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன். #  தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் ...
image-54010

வெருளி நோய்கள் 466 – 470 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 466 – 470 466. ஊக்கிசை வெருளி – Zorevophobia ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ...
image-54022

நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 15 கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடியார், பொறையுடைமை, 80)தான் கெடினும் - தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு ...
image-53993

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில் இக்கோப்பில் Action should be taken on 30.9.92 positively என ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் எழுதும் பலர்கூட, இவ்வாறு கோப்பில் சுருக்க ஆணைகளை அல்லது கட்டளைகளை அல்லது குறிப்புகளை ஆங்கிலத்தில் ...
image-54006

வெருளி நோய்கள் 461 – 465 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 461 – 465 உறைபனி வெருளி - Pagophobia உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளிசிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ ...
image-53964

தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:       “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் ...
image-54004

வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி - Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் ...
image-54015

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்

(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!  “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…”                   – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ...
image-54000

வெருளி நோய்கள் 451 – 455 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 446 – 450 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 451 – 455 உலைச்சல் வெருளி/ உளைச்சல் வெருளி - Anchophobia மன உலைச்சல்(anxiety) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலைச்சல் வெருளி. உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உலைச்சல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.மன உளைச்சலானது சுற்றுச்சூழல், தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள், வேலையில் அதிக ...