மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்

                                 - அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு -                வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து   உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், ...
image-5825

தொடரித்துறையில் வேலைவாய்ப்பு – எழுச்சிப் பேரணி

ஒருங்கிணைந்த தொடர்வண்டிப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி   தமிழர் எழுச்சி இயக்கம் நடத்திய கோட்டை நோக்கி மாபெரும் பேரணி! ஒருங்கிணைந்தரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித்துறையில் பயிற்சி முடித்த 5000 தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஐ.சி.எப் மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறை வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை ...
image-5863

செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை   நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் ...
image-5720

ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

நன்னன் குடி நடத்திய நூல்கள் வெளியீட்டுடன் கூடிய ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா 2014 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் பக்கல் அன்று புலவர்.நன்னன்  எழுதிய8 நூல்கள் வெளியீடும் மாணவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கும்பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது.  நன்னன்குடிகடந்த11 ஆண்டுகளாகத்  தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்குக்  கம்பன் கழகத் தலைவரும்எம் ...
image-5716

மாமூலனார் பாடல்கள் 29: சி.இலக்குவனார்

(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி)   உகூ. “நாட்டனர் வாழி!”  -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி : அம்ம! நின் காதலர் நின்னை விட்டுப் பிரியவே மாட்டார் என்றாய்! பிரிந்தாலும் விரைவில் வந்துவிடுவார் என்றாய், சென்றவரை இன்னும் காணமுடியவில்லையே. தலைவி: வராது என்ன செய்வார்? வருவார். தோழி: எப்போழுது? உன் அழகு எல்லாம் ...
image-5711

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150: இலக்குவனார் திருவள்ளுவன்

  (ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 126. அனைய திருப்பதிகம்உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார். –பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 173   127 & 128. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத ...
image-5786

பன்னாட்டுக் கருத்தரங்கு

    அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பன்னாட்டுக் கருத்தரங்கு-தமிழறிஞர்கள்-எழுத்தாளர்கள் குறித்த பொருண்மையில் நூலாக்கப்பணி-ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று நூல்கள் எழுத அரிய வாய்ப்பு. பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.  தமிழ்ப்பணியின் தொடர்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்க. அழைப்பும் விவரங்களும் காண்க:   அறிவிப்பு மடல்   மேலும் தகவல்களுக்கு : முனைவர் அரங்க.பாரி(ஒருங்கிணைப்பாளர், 9842281957) முனைவர் ப.சு,மூவேந்தன்,(இணை ஒருங்கிணைப்பாளர்,) முனைவர் சா.இராசா (இணை ஒருங்கிணைப்பாளர் 9976996911,8680901109)    
image-5780

உலக நட்பு நாள் வாழ்த்துகள் – சேது சுப்பிரமணியம்

   (ஆகத்து முதல் ஞாயிறு) சாதி, இனம் சாராது சமயம், மொழி பாராது நாடு, நிறம் நாடாது கல்வி நிலை காணாது செல்வநிலை தேடாது பாலினமும் பாராது ஊனங்களை உணராது குற்றங்குறை கூறாது எத்தனை இடர் வரினும் எள்ளளவும் மாறாது சொத்து சுகம் இழந்தாலும் சொந்த பந்தம் இகழ்ந்தாலும் தத்தளிக்கும் சூழ்நிலையில் தனது நிலை பாராது உள்ளமொன்றிப் பழகிடும் உன்னத நிலையிது கள்ளமின்றிப் பழகிடும் அற்புத உறவிது இவ்வுறவுக் கெவ்வுறவும் ஈடு இணை இல்லையே இவ்வுறவுக் கென்றேன்றும் வானம்தான் எல்லையே!  நட்புடன் சிலேடைச் சித்தர் சேது சுப்பிரமணியம் சிகாகோ தரவு: முதுவை இதாயத்து