(வெருளி நோய்கள் 1051-1055: தொடர்ச்சி)

சிறுநீர்க்கழிப்பிடம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுநீர்க்கல வெருளி.
சிறுநீர்க்கலன், சிறுநீர்க்கழிப்பிடம் மூலம் தொற்றுநோய் பரவும் எனப் பேரளவு அச்சம் கொள்கின்றனர்.
Ouritirio என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிறுநீர்க் கழிப்பிடம் எனப் பொருள்.
காண்க : பொதுக்கழிப்பிட வெருளி(Koinoloutrophobia)
00

சிறுமியர் பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் சிறுமி வெருளி.
மரபு வழியில் அல்லது சிறுமியர் தொடர்பான மோசமான நிகழ்வுகள் போன்றவற்றால் சிறுமியர் மீது பேரச்சம் கொள்கின்றனர். பொதுவாக வயது வந்த ஆடவருக்குச் சிறுமி வெருளி உள்ளது. பெண்வெருளி உள்ளவர்க்கும் சிறுமி வெருளி உள்ளது.
சிறுமி வெருளி உள்ளவர்களைப் பெஞ்சமின் பிரிகன்(Benjamin Briggs) என்னும் பட்டப்பெயரில் அழைப்பர்.
puella என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சிறுமி.
00

  1. சிறுவகைமீன் வெருளி-Bettaphobia

சிறுவகை மீன்தொடர்பான காரணமற்ற பேரச்சம் சிறுவகை மீன் வெருளி.
பெட்டா(Betta) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள, சிறிய பளிச்சென்ற நிறம் கொண்ட நீண்ட துடுப்பு உறுப்பு கொண்ட நன்னீர் மீன் வகை. சியாமி(Siamese) சண்டை மீன் இவ்வகையைச்சார்ந்ததே.
00

சிறிய பொருள்களைக்(small things) கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் சிறுமை வெருளி.
சிறு பொருள்கள், நுண்ணிய பொருள்கள் முதலியவற்றைச் சரியாகப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது, உணவில் அல்லது மருந்தில் கலந்து தீமை விளைவிக்கலாம் என்றெல்லாம் பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.
பெரும்பொருள் வெருளி(Megalophobia)க்கு எதிரானது.
micro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிறியது.
00

சிறுவன் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறுவன் வெருளி.
ஆடவர் வெருளி உள்ளவர்களுக்குச் சிறுவன் வெருளி வருகிறது. பொதுவாகப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறுவன் வெருளி வருகிறது.
puer என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சிறுவன் எனப் பொருள்.
00