(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி)

 1006. Authorities          அதிகார அமைப்புகள்‌

ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள்
1007. Authority inferior               கீழ்நிலை  அதிகாரி  

எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி
 1008. Authority, power and          அதிகாரமும்‌ அதிகார உரிமையும்‌

Authority  என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு, வல்லுநர், மேற்கோள் எனப் பல பொருள்கள். இங்கே அதிகாரி எனப் பொருளாகிறது.
1009. Authorizingஅதிகாரமளித்தல்;
உரிமையளித்தல்;
இசைவளித்தல்.  

சட்ட பூர்வமான அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவருக்கோ மற்றொரு அமைப்பிற்கோ ஒன்றைச் செயற்படுத்துவதற்குரிய அதிகாரமளித்தல்
1010. Autocracy    கொடுங்கோன்மை;

கடுங்கோன்மை
தன்முனைப்பாட்சி,
வல்லாட்சி,
வல்லாண்மை,
தனிவல்லாண்மை,
தன் விருப்பு ஆட்சி
  ‘ஏகாதிபத்தியம்’, ‘சருவாதிகாரம்’ கடைசி  இரண்டும் தமிழல்ல.

வல்லாட்சி என்பது ஆட்சியாளர் சட்டத்தினாலோ அரசியலமைப்பினாலோ வரையறுக்கப்படாத முழுமையான, கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தைப் பயன்படுத்துவது.   மக்களாட்சியைப் போலல்லாமல், சட்ட அமைப்பு வல்லாட்சியின் விருப்பத்திற்குப் பணியாற்றுகிறது.   இது சட்டத்தின் ஆட்சி, மக்களின் குடியுரிமைத் தற்சார்புகளின் அடிப்படை அரிப்புக்கு வழிவகுக்கிறது.

(தொடரும்)