(வெருளி நோய்கள் 1046-1050)

1051. சிறுத்தைப் புலி வெருளி – Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/ Iagouarophobia 

சிறுத்தைப்புலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுத்தைப்புலி வெருளி.

Gatopardo என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சிறுத்தைப்புலி. Iagouaro என்றால் jaguar  எனப் பொருள்.  மாயன் மொழியில் jaguar என்றால் ஒரே பாய்ச்சலில் கொல்லும் விலங்கு எனப் பொருள்.

காண்க: சிவிங்கிப்புலி வெருளி (Acinonyxphobia/Panthiraphobia)

00

1052. சிற்றின நாய் வெருளி- Chihuahuaphobia

சிறிய அளவிலே வளரும் சிற்றின நாயைக் கண்டு ஏற்படும் பேரச்சம் சிற்றின நாய் வெருளி.

முதலில் சிறுநாய் எனக் குறித்திருந்தேன். சிறு நாய் என்றால் குட்டி நாய் எனத் தவறாகக் கருதப்படலாம். எனவே, சிற்றின நாய் என மாற்றியுள்ளேன்.

நாயினம் உள்ள ஊரின் பெயரல் நாம் இராசபாளையம் நாய், கோம்பை நாய் என்றெல்லாம் சொல்கிறோம் அலலவா? அதுபோல், மெக்சிகனில் உள்ள சிஃகாஃகா(Chihuahua) நகரின் பெயரில் இந்நாய் அழைக்கப்படுகின்றது.

00

1053. சிறுநீரகநோய் வெருளி- Albuminurophobia

சிறுநீரக நோய் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுநீரகநோய் வெருளி.

Albumin என்பது இங்கே வெண்சிறுநீரைக் குறிக்கிறது.

00

1054. சிறுநீரக வெருளி-Nefrophobia

சிறுநீரகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுநீரக வெருளி.

Nefro என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிறுநீரகம் எனப் பொருள்.

00

1055. சிறுநீர் வெருளி-Urophobia

பொதுவிடங்களில் சிறுநீர் கழிப்பது குறித்த பேரச்சம் சிறுநீர் வெருளி.

சிறுநீர் நாற்றம், நிறம், சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி போன்றவற்றாலும் சிறுநீர் கழிப்பதில் பேரச்சம் கொள்வர்.

uro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிறுநீர்.

00