வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1156-1160
- சோள வெருளி – Kalampokiphobia
சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.
நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.
சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.
00
- சோளத் தோசை வெருளி – Tortillaphobia
சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.
Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa) மெல்லிய தோசையைக் குறிக்கிறது.
மென்தோசை வெருளி என்றால் பொதுவாக அரிசி மாவு தோசையைக் குறிக்கும் என்பதால் சோளத்தோசை எனக் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சோள மாவில் சுட்டாலும் கோதுமை மாவிலும் சுடுவார்கள்.
00
- சோளப் பொரி வெருளி – Popcornphobia
சோளப் பொரி குறித்த அளவு கடந்த பேரச்சம் சோளப் பொரி வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளப் பொரி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
- சோளப் பொறிப்பி வெருளி – Y∞gomphobia
சோளப் பொறிப்பி(popcorn popper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சோளப் பொறிப்பி வெருளி.
சோளப் பொரி உள்ளவர்களுக்குச் சோளப் பொறிப்பி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
- சோனி வெருளி – Sonyphobia
சோனி நிறுவனப் பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனி வெருளி.
“sonus” என்னும் இலத்தீன் சொல் ஒலியைக் குறிக்கிறது. இதிலிருந்து உருவானதே Sony. இதன் பெயரில் உருவானதே சோனி நிறுவனம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply