வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 729-733
729. காசாளர் வெருளி – Tamiaphobia
காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி.
கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள்.
00
730. காசு வெருளி – Cuprolaminophobia
காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி.
காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர்.
Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )
lamina என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மென் தகடு. இரண்டும் சேர்ந்து செம்பு மாழையில் மென்தகடாக ஆக்கப்படும் காசினைக் குறிக்கின்றன.
00
731. காட்சி வெருளி – ostentlorphobia
காற்சட்டைகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பான தேவையற்ற பேரச்சம் காட்சி வெருளி.
காட்சிப்படுத்து வெருளி என்பதையே சுருக்கமாகக் காட்சி வெருளி என்கிறோம்.
பொதுவாக ஆடவருக்கே மிகுதியாக வருகிறது.
osten என்னும் இலத்தீன் சொல்லிற்குக் காட்சிப்படுத்து எனப் பொருள்.
00
732. காட்டுத்தீ வெருளி – Agripyrophobia
காட்டுத்தீபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காட்டுத்தீ வெருளி.
கிரேக்கத்தில் agri என்றால் புலம் என்றும் pyro என்றால் தீ என்றும் பொருள்.
00
733. காட்டுக் குரங்கன் வெருளி-Ourakotagkophobia
காட்டு மனிதக் குரங்கு / காட்டுக் குரங்கன் (orangutans/orang-utan/orangutang/orang-utang) மீதான அளவுகடந்த பேரச்சம் காட்டுக் குரங்கன் வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5






Leave a Reply