பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்
பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்
தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவருமன் காலக் குடைவரைக்கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்திரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.
இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்கக்காலத்தைச் சேர்ந்தது. இவற்றைக் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நாள் : தை 30, 2048 / பிப்பிரவரி 12, 2017
தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்,
திருவான்மியூர், சென்னை 600 041
பயணக் கட்டணம் :உரூ.950
காலை உணவு , நண்பகல் உணவு, தேநீர், நினைவுஅளிப்பு வழங்கப்படும்.
இணையவழிப்பதிவிற்கு : http://www.panuval.com/panuval-archaelogical-trip-7-dusi-mamandur
விவரங்களுக்கு அழைக்கலாம் : 9789-00-9666 / 044-431-00-442






Leave a Reply