‘சூழ்நிலை அடிப்படையிலான தகவமைப்பு கற்பித்தல்’ தலைப்பில்  இணையவழிக்கருத்தரங்கம்

சென்னை,  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன்  கோவை பாரதியார் பல்கலைக் கழகம், கொடைக்கானல் அன்னைதெரசா பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்திய பன்னாட்டு இணையவழிக்கருத்தரங்கம் ஆடி 28-ஆவணி 02, 2051  / 12.08.2020 முதல் 18.08.2020 வரை “சூழ்நிலை அடிப்படையிலான தகவமைப்பு கற்பித்தல்” என்னும் தலைப்பில்  இனிதே நடந்தேறியது. இக்கருததரங்கத்தில் பன்னாட்டுத் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 

இக்கருத்தரங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிக்குக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் பேராசிரியர் காளிராசு தலைமை வகித்தார். கொடைக்கானல் அன்னைதெரசா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வைசெயந்தி விசயகுமார் கருத்துரை வழங்கினார். சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ந. பஞ்சநதம் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புலமுதல்வர் பேராசிரியர் ம. கோவிந்தன் வரவேற்புரை வழங்கினார். சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் வை. பாலகிருட்டிணன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தொலைமுறைக் கல்விக்கூடத்தின் இயக்குநர் பொறுப்பு பேராசிரியர் தாமசு ஆகியோர்  நிறைவுரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கினைப்பாளரான முனைவர். த. சிவசக்தி இராசம்மாள் சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகத்தை நிகழ்த்தினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்  துறைத்தலைவர் முனைவர். பேராசிரியா இரேணுகாதேவி,  அன்னைதெரசா பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் முனைவர். பேராசிரியர் பிந்து கருத்தரங்கத்தின் மையக்கருத்தினை விளக்கினார்கள். 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் தி.பிரேமலதா கருத்தரங்க நிறைவறிக்கை வாசித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பி. சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கேரளா, பெங்களுரு, புது தில்லி முதலான மாநிலங்களிலுருந்தும், துபாய், சௌதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்தும் கருத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில்  உரையாற்றினார்கள்.                                                       

இக்கருத்தரங்க ஏற்பாட்டினை மூன்று பல்கலைக்கழகங்களின் அமைப்புக்குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

 – முதுவை இதாயத்து