(வெருளி நோய்கள் 1251 -1255 :  தொடர்ச்சி(

திசைகாட்டி(compass) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திசைகாட்டி வெருளி.
திசைகாட்டி சரியாகத் திசையைக் காட்டாமல் போனால், பயணம் மாறும், இலக்கு தவறும் என்பன போன்ற அளவுகடந்த காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்
அச்சந் தொலைய கவலையைத் திசைகாட்டியாகக் கொண்டு முன்னேற வேண்டும் (Use Fear as Compass for Growth) என்பர்.
00

திடல் அல்லது நிலத்தளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் திடல் வெருளி.
திடலில் உள்ள சமனற்ற மேடும் பள்ளமுமான நிலைமை, குப்பைக் கூளங்கள் முதலியவற்றால் தொற்று நோய் பரவும், இடர்ப்பாடு நேரும் என்று அளவுகடநத தேவையற்ற அச்சம் கொள்கின்றனர்.
Terram என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பூமி எனப் பொருள்.
காண்க: தள வெருளி(Tabulatophobia)
00

காணாட்டத்தில் வரும் புனைவுருவான திடி குரங்கன்(Diddykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திடி குரங்கன் வெருளி.
Kong என்னும் சப்பானியக் கொச்சைச் சொல்லிற்குக் கொரில்லா / மனிதக் குரங்கு எனப் பொருள். குரங்கன் எனச் சுருக்கிக் கையாளுகிறேன்.
00

திணைப் படம் குறித்த வரம்பற்ற பேரச்சம் திணைப் பட வெருளி.
திணப்படம் சரியாக இல்லையேல் செல்லுமிடத்தைச் சரியாக அடையாளம் காண முடியாது, நமது திணைப்படம் எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் பேரிடர் விளையும் என்பன போன்ற காரணங்களால் திணப்படம் குறித்துக்காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Map என்றால் நாட்டுப்படம், நிலப்படம், உலகப்படம் என்று குறிப்பிடுகின்றனர். ஐந்திணைகளையும் குறிக்கும் இதனைத் திணைப்படம் என்பதே சரியாக இருக்கும்.
00

தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.
‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத் தித்திப்பு என்னும் பொருளுடைய தித்தி எனக் குறித்துள்ளேன்.
00