(வெருளி நோய்கள் 659-663: தொடர்ச்சி)

கரிம உயிர்மப் பயன்பாட்டுத்  தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிம உயிர்ம வெருளி.

இணையத் தளங்களில் விரிவான விளக்கம் கண்டுணர்க.

00

நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சுத் தன்மை மிகக கரிம உயிர் வளிமம் (கார்பன் மோனாக்சைடு) மீதான அளவு கடந்த பேரச்சம் கரிம உயிர்வளிம வெருளி.

00

கரிய மென்னீர் கொக்கொ கோலா குறித்த வரம்பற்ற பேரச்சம் கரிய நீர் வெருளி.

கரியநீர், குளியல் அறை, கழிவுகலன் முதலியவற்றைத் தூய்மை செய்யக்கூடிய தன்மையது; எனவே, உடலுக்குக் கேடு தரும்  எனப் படிப்பதால் இது குறித்து அளவுகடந்து பேரச்சம் கொள்கின்றனர்.

00

கரு நிற ஒளி விளக்கு(black light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கரு விளக்கு வெருளி.

மிகச்சிறு அளவில் தெரியும் புற ஊதா ஒளி, மானிடப் பார்வை அளவுகளைத் தாண்டி இருப்பதால,  அது கண்ணுக்குத் தெரியாது. எனவே இந்தப் புறஊதா ஒளி உள்ள அறை கருப்பு ஒளி வெளிச்சம் உள்ளதாகத் தோன்றுகிறது.

00

கருஞ்சிவப்பு நிறம் மீதான இயல்புமீறிய பேரச்சம் கருஞ்சிவப்பு வெருளி எனப்படும்.

கருஞ்சிவப்பு நிறத்தைக் காலனாகக் கருதி அஞ்சுவார்கள் இத்தகையோர். கருஞ்சிவப்பு நிற மலர்களையோ கருஞ்சிவப்பு வண்ணப் பழங்களையோ(Berry) அவ்வண்ணத்திலான குதிரைகளையோ, உடைகளையோ கண்டு பேரச்சம் கொள்வர். பிறர் கருஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து வந்தாலும் பேரச்சம் கொள்வர். தோலில் கருஞ்சிவப்புநிறப் புள்ளி நோய் வரும் என்று அஞ்சுவர். கருஞ்சிவப்பு நிறக் கெம்புக்கல்(Ruby) விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதனை ஏற்க மாட்டார்கள்.

prophyro என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கருஞ்சிவப்பு (purple)எனப் பொருள்.

00

(தொடரும்)