கட்டுரைதிருக்குறள்

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! – மு.வை.அரவிந்தன்

தலைப்பு-காமத்துப்பால் அறநெறியே :thalaippu_kaamathuppaal_araneriye

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே!

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்; அகப்பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனை வளமும் இலக்கியச் சுவையும் சேர்த்து அமைக்கப்பட்ட கலைக்கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்ப நெறி.

  வாத்சயாயம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்சயாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது.

ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.362

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *