பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! –  2 / 2   தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புதுமைப் பாவலர்கள்  முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்;  மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே  நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி  தோன்றியது. விவாகம்  விலகித் திருமணம் இடம் பெற்றது….

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! – மு.வை.அரவிந்தன்

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்; அகப்பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனை வளமும் இலக்கியச் சுவையும் சேர்த்து அமைக்கப்பட்ட கலைக்கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்ப நெறி.   வாத்சயாயம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்சயாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது. ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:…

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயரில் புலவர் சிலர் இருந்தனர்

    கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயருடன் பண்டைக்காலத்தில் புலவர் சிலர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட கல்லாடர் … சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் அனைவர்க்கும் பிற்பட்டவர் கல்லாடர். இவர் உரை, முன்னோர் உரைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை எல்லாம் ஒழுங்கு சேர்த்து எழுதப்பட்ட உரையாக உள்ளது. … “பெயர் நிலைக்கிளவி” என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது. … கல்லாடர் உரையைப் பிரயோக விவேக நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார் … எனவே, கல்லாடர் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும் பிரயோக…

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள் – மு.வை.அரவிந்தன்

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்   இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்­காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும்…

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளை­யும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை   சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக்…

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் – மு.வை.அரவிந்தன்

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் பிறர்கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன. இளம்பூரணர்த் தமிழ்க்கடலுள் பலகால் மூழ்கிதீ திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ் நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.146

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர்

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர் திருக்கோவையார் உரைகண்ட பேராசிரியர் பொதுப்பாயிரம் செய்த ஆத்திரையன் பேராசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் குறுந்தொகை உரையாளர் பேராசிரியர் பேராசிரியர் நேமிநாதர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர்