(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி)

1016. Autrefois acquitமுன்னரே விடுவிக்கப்பட்டடவர்.
முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர்.

autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும்.
autre = மற்றொரு +‎ fois = நேரம்

எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை.

முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத்  தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்படுவது எனப் பொருளாகும். எனவே, Autrefois acquit என்பதை முன் விடுதலை என்று சொல்லக் கூடாது. அகராதியைப்பார்த்து நான் முன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் தவறாகும்.  

இந்தியக் குற்றவழக்கு நடைமுறைச் சட்டத்தொகுப்பு(CrPC) பிரிவு 300, இரட்டை இடர்()கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை விளக்குவதே இத் தொடர்.
 1017. Autrefois acquit – plea of    முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்னும் வாதம் 

விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது மீண்டும் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்கான வாதுரை.

காண்க:  Autrefois acquit
 1018. Autrefois convict        முன்னரே தண்டிக்கப்பட்டவர்

எதிர்வாதி முன்னரே தண்டிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப் படுவதிலிருந்தோ தடுத்தல்.

ஒரு குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் இயற்கை நீதி.

காண்க:  Autrefois acquit
1019. Autrefois convict -plea ofமுன்னரே தண்டிக்கப்பட்டவர் என்னும்  வாதம்‌

முன்னரே தண்டிக்கப்பட்ட குற்றச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கக்கூடாது என்பதற்கான வாதுரை.

முந்தைய தண்டனை வாதம் என அகராதிகளில் குறிக்கப்பெற்றுள்ளது பொருந்தாது. முந்தைய தணடனை குறித்த வாதம் அல்ல. முந்தைய தண்டனைச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் வாதம்.

காண்க: Autrefois convict
1020. Auxiliary    துணைமை

எனினும், துணைவர் துணைப்படைவீரர் துணைவினை(இலக்கணம்) துணையான
உடனுதவியான
உதவியாளரான
துணைக்கருவி
எனப் பல பொருள்களில் குறிக்கப்படுகிறது.

துணைமையர்(Auxiliary Person) என்பது தொடர்புடைய பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது துணை ஒப்பந்தக்காரர் அல்லது ஒப்பந்தரின் பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது அவரின் அதிகாரி, சார்பாளர், அறிவுரைஞரருக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பணியாற்றுநரைக் குறிக்கிறது.