செய்திகள்நிகழ்வுகள்

ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

நன்னன் குடி நடத்திய நூல்கள் வெளியீட்டுடன் கூடிய

ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

na.annal01

2014 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் பக்கல் அன்று புலவர்.நன்னன்  எழுதிய8 நூல்கள் வெளியீடும் மாணவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கும்பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது.  நன்னன்குடிகடந்த11 ஆண்டுகளாகத்  தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இவ்விழாவிற்குக்  கம்பன் கழகத் தலைவரும்எம் சி ஆர் கழகத்தலைவருமாகிய இராம.வீரப்பன் தலைமைத் தாங்கி நூல்களைவெளியிட்டு பரிசுகளை வழங்கி  உரையாற்றினார்.

புலவர் நன்னன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் விழாவின்

நோக்கங்களைப் பற்றி விளக்கியும் பேசினார்.

மேடையில் வீற்றிருந்த அறிஞர்களுக்குப்  புலவர் நன்னனின் மருமக்கள் செம்மலும் தமிழ்ச்செல்வனும்  சிறப்புச் செய்து மகிழ்ந்தனர்.

சீதா செந்தாமரைக் கண்ணன், புலவர் த.சுந்தரராசன், பெருங்கவிக்கோவா.மு.சேதுராமன், புலவர் ப.கி.பொன்னுசாமி, புலவர் கி.த. பச்சையப்பன், துரைமா.பூங்குன்றன் ஆகியோர்  நூல்களைப் பற்றிய  திறவுரை ஆற்றினர்.

புலவர் நன்னன் அவர்களின் மக்கள் அவ்வை தொகுப்புரையும் வேண்மாள் நன்றியுரையும் கூறினர்.

விழாவில் 350 பேர் கலந்து கொண்டனர். விழா நிறைவுற்றதும் நல் விருந்து வழங்கப்பட்டது.

விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்:

1) அருந்தமிழ் விளக்கம்-2

2) இவர் தாம் பெரியார் (வரலாறு)-6

3) காப்பியம் கற்போம்-மணிமேகலை

4) சும்மா விருக்க முடியவில்லை

 5) அன்பின் வெற்றி

 6) உழைப்பின் மிக்க ஊதியமில்லை

 7) குறளின் குரல்

 8) பழமொழி நானூறு

 (ஒளிப்படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *