வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 574-578
574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia
தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி.
குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல் போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர்.
குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு சிறைத் தண்டனை பற்றிய பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர்.
ஒறுப்பு வெருளி என்பது குற்றங்குறை கூறப்படுவது, திறனாய்வு(விமரிசனம்)குறித்துப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதையும் குறிக்கும். அரசியல் வாதிகள் பலருக்கும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இவ்வெருளி உள்ளது. இதன்அடையாம்தான் அரசு தேவையற்ற அவதூறு வழக்குகளைத் தொடுப்பது. செவிகைப்பச் சொற்பொறுக்கும் – வெறுக்கத்தகும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் – பண்பு இருந்தால் குறைகளைக் களையும் செயல்பாடு வருமே தவிரப் பேரச்சம் வராது.
rhabdo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கழி, கம்பு, தடி, கம்பி, கோல் முதலான பொருள்கள்.
poin என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தண்டனை.
mastigo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கசையடி அல்லது பிரம்படி.
00
575. ஒற்றைக் கொம்பன் வெருளி – Monokerophobia
ஒற்றைக் கொம்பன்(unicorn) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஒற்றைக் கொம்பன் வெருளி.
ஒற்றைக் கொம்பன் – ஒற்றைக் கொம்புள்ள குதிரை போன்ற வடிவுள்ள விலங்கு. –
00
576. ஒற்றைப்படை வெருளி – Imparnumerophobia
ஒற்றைப்படை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒற்றைப்படை வெருளி.
impar, numerus ஆகிய இலத்தீன் சொற்கள் இணைந்து ஒற்றைப்படை எண் எனப் பொருள்.
00
577. ஒன்பதன்கூறு வெருளி – Enatophobia
ஒன்பதன்கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒன்பதன்கூறு வெருளி.+ ஒன்பதாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு ஒன்பதன்கூறு வெருளி வர வாய்ப்புள்ளது.
00
578. ஓகி வெருளி – Oggyphobia
புனைவுரு ஓகி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓகி வெருளி.
ஓகி என்னும் பூனை ஃபிரெஞ்சு தொலைக்காட்சி அசைவூட்டத் தொடர் ஒன்றில் இடம் பெறும் புனைவுரு பாத்திரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply