வெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 509-513
- எலுமிச்சை வெருளி – Lemoniphobia
எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.
எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர்.
00
- எலுமிச்சைப் பான வெருளி – Lemonadaphobia
எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.
எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம் பழப்பானம் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சங்கள் வருவது இயற்கையே. எலுமிச்சை வெருளிக்குக் கூறியவையே இதற்கும் பொருந்தும்.
00
- எலுமோ வெருளி – Elmophobia
பொம்மலாட்டப் புனைவுருவான எலுமோ (Elmo) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எலுமோ வெருளி.
எள் தெரு(Sesame Street) என்னும் புனைவுரு பாத்திரத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பாத்திரம் என்மோ/எலுமோ(Elmo).இப்பாத்திரம் குறித்த பகுத்தறிவற்ற பேரச்சமே எலுமோ வெருளி. எலுமோ குறித்த கொடுங்கனவும் என்மோ வெருளிக்குக் காரணமாகும்.
00
- எலும்புக் கூடுகள் வெருளி – Skelephobia
எலும்புக் கூடுகள்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எலும்புக் கூடுகள் வெருளி.
பேய்க்கதைகளில் அல்லது பேய்ப்படங்களில் பேயாக எலும்புக்கூட்டு உருவத்தைக் காட்டுவது வழக்கமாக உள்ளது. இதனால், எலும்புக்கூட்டைப் பார்ப்பவர்களுக்குப் பேயைப் பார்த்ததாக் கருதித் தேவையற்ற அச்சம் வருகிறது. எலும்புக் கூட்டின்மூலம் எதிரிகள் அல்லது வேண்டாதவர்கள் செய்வினை செய்திருப்பார்கள் என்ற அச்சமும் கொள்கின்றனர்.
00
- எழு நாள் முயல் வெருளி – Paschakounephobia
நாட்டுப்புறக் கதை உருவமான உயிர்த்தெழு நாள் முயல் (Easter Bunny/ Easter Rabbit/Easter Hare) பற்றிய பேரச்சம் எழு நாள் முயல் வெருளி.
முயல் வெருளி(leporiphobia) உள்ளவர்களுக்கு எழுநாள் முல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. ((lepus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முயல்.)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply