வெருளி நோய்கள் 529-533: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 524-528: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 529-533
- ஏமாற்ற வெருளி – Apogoitefsiphobia
ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.
இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.
00
- ஏரி வெருளி – Limniphobia/Limnophobia
ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.
ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Limne /limno என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஏரி.
00
- ஏவு குண்டு வெருளி – Ballistophobia
ஏவுகணை(missile)-குண்டு(bullet) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏவு குண்டு வெருளி.
அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தப் பாதிப்பு(post traumatic stress disorder) உள்ளவர்களுக்கு ஏவு குண்டு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
தொல்லையூட்டும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகளால் இத்தகையோர் பாதிப்புறுகின்றனர்.
தமிழ் ஈழம் போன்ற இனப்படுகாெலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும் போர்க்கொடுமைகளைச் சந்தித்தவர்களுக்கும் இவ்வெருளி வருகிறது. சிறுவர்களும் பெண்களும் இதனால் மிகுதியும்பாதிப்புற்றாகின்றனர். இவற்றை அறிந்தவர்கள் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
- ஏழன்கூறு வெருளி – Evdomophobia
ஏழாம் எண்கூறுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏழன்கூறு வெருளி.
எண் ஏழுடன் தொடர்புடையவை, ஏழு கூறுகளாக்கப்பட்ட பகுதி, ஏழு பிரிவுகளாக்கப்பட்ட தொகுதி என ஏழுடன் தொடர்புடையவற்றின் மீது இவர்கள் பேரச்சம் கொள்வர்.
00
- ஏழாவது வார வெருளி – Nanatshuphobia
ஆண்டின் ஏழாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஏழாவது வார வெருளி.
எண் ஏழு வெருளி உள்ளவர்களுக்கு ஏழாவது வார வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply