வாழ்க தமிழ் பேசுவோர்..
– வித்யாசாகர் ‘வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி’யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ? ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ கூட…
சருகாகிக் கருகும் அரும்புகள்
– முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள். வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும். வாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள். நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில்…
