உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, தாய்லாந்து ஆனி12-14, 2057/26.06.26-28.06.26
தாய்லாந்தில் அசம்புசன் பல்கலைக்கழகத்தில் ஆனி11-13, 2057/25.06.26-27.06.26 நாள்களில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. கருத்துகள் வலைப்பூவில் முழு அழைப்பிதழ்களைக் காணலாம். https://thiru2050.blogspot.com/2026/06/11-13-2057250626-270626.html
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்! லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்? தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம். ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர். ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்….
வெருளி நோய்கள் 1616-1620 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1611-1615 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1616-1620 பிறரின் பரந்த சிந்தனை குறித்த அளவுகடந்த பேரச்சம் பரந்த சிந்தனை வெருளி.Librophobia என்றால் சிலர் புத்தக வெருளி என்கின்றனர். இது தவறு. Libro என்பது புத்தகத்தைக் குறித்தாலும் புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் பரத்த சிந்தனையையே இங்கே குறிக்கிறது. புத்தகங்கள் மீதான பேரச்சத்தை நூல் வெருளி – Biblio phobia என்பர்.00 பரவிசை(pop music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பரவிசை வெருளி.மக்களால் பரவலாக வரவேற்கப்படும் இசை வடிவம். எனவே பரவிசை எனலாம்.இசை வெருளி உள்ளவர்களுக்குப் பரவிசை…
திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்
– திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். (திருக்குறள், ௨௱௬௰௪ – 264) என்கிறார் திருவள்ளுவர்….
வெருளி நோய்கள் 1611-1615 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1607-1610 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1611-1615 பயனிலி வலைத்தளங்கள் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் பயனிலித்தள வெருளி.பயனிலித் தளம்(The Useless Website) என இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட தளங்கள் உள்ளன.தேவையற்ற தகவல்கைளத் தருவனவாகவும் பயனற்ற விவரங்களை அளிப்பனவாகவும் தவறான பொருள் விளக்கம் தருவனவாகவும் பல தேவையற்ற இணையத் தளங்கள் உள்ளன.இவற்றால் தவறாக வழிகாட்டப்படுவோம், தீய விளைவிற்கு ஆட்படுவோம் என்றெல்லாம் தேவையற்ற காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். பயனற்ற தளங்களை அடையாளங் கண்டால் முற்றிலுமாக அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.00 சுற்றுலாப்பயணிகள் குறித்த தேவையற்ற பேரச்சம்…
வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1601-1606 பத்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் பத்தாம் வகுப்பு வெருளி.பொதுவாகத் தேர்வு வெருளி உள்ளவர்களுக்குப் பத்தாம் வகுப்பு வெருளி வருகிறது. பள்ளியின் இறுதி நிலையாக அல்லது அடுத்த நிலைக்குச் செல்வதற்குரிய முதன்மை நிலையாகப் பத்தாம் நிலை உள்ளது. எனவே, தேர்வு அச்சம் ஏற்பட்டுப் பத்தாம் வகுப்பில் பயில்வது குறித்துத் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.00 ஆண்டின் பத்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பத்தாம் வார வெருளி.00 சிலவகை உணவுகளை உண்ணக்கூடாது…
வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1591-1600 ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.00 பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.00 ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.00 ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.00 ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.00 பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.00…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 28. ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: தொடர்ச்சி) ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ் நாளும் வெளிவரும் மின்னிதழ் ஒன்றுக்குப் ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ளது. செய்தியாளர்கள், எதற்கெடுத்தாலும் ‘பக்கா’ என்று அடைமொழி சேர்த்துச் செய்திகளைத் தருகின்றனர். ‘பக்கா’ என்னும் உருதுச் சொல்லைச் சரியான, பெரிய, திருத்தமான, திருத்தமாக, செம்மையாக எனப் பல பொருள்களில் பயன்படுத்துகின்றனர். இத்தனைத் தமிழ்ச்சொற்களை இடத்திற்கேற்பப் பயன்படுத்துவதை விட்டு விட்டு உருதுச்சொல்லைப் பயன்படுத்தும் பைத்தியப் போக்கு எப்படி வந்தது? அண்மைய மாதங்களில் ‘பக்கா’ பைத்தியத்துடன்…
வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1586-1590 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
‘தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு
‘தனித்தனிக்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு 2025 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான பரிசுகள் இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல், அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள்…
வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1581-1585 பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.00 பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன…
