வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக எதிர்வரும் ஆகத்து – (2016) திங்கள் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவும், “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எனவே, மதிப்பிற்குரிய மேனாள்துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள் தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும்…
‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி
‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. ‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…
15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக் “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…
திருக்குறள் மாநாடும் கலைத்தென்றலும்
சித்திரை 24, 2047 / மே 07, 2016
17ஆவது சைவ மாநாடு, இலண்டன்
சித்திரை 17 , 2047 / ஏப்பிரல் 30 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை சிறப்பு விருந்தினர்: சிவஞான பாலையா சுவாமிகள் சித்திரை 18, 2047 / ஏப்பிரல் மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு சித்திரை 24 & 25, 2047 / மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம். நண்பர்களே! இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8 நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…
சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம்
சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம் தமிழ் ஆய்வுலகின் நண்பர்களுக்கு, வணக்கம். சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆய்வுக் கழகத்தின் முதல் கருத்தரங்க நிகழ்வு “நாட்டுப்புற வழக்காறு – தற்காலத் தமிழிலக்கியங்களில் வட்டார வழக்கு” என்னும் பொருண்மையில் 2016 ஆகத்து இறுதி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி சார் அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும். இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விரும்புவோர் 1. பெயர்…
வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்
வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், 200-ஏ(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன், என்6 5பிஏ. [200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA]. அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி. அன்புடையீர், வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில்…
ஏழுதமிழர் விடுதலை : நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடல், சிதம்பரம்
கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்.. தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்.. உண்மை அறியும் குழு, நீதிமன்றம் நியமித்த செயின்ஆணையம் சொல்கின்றன, இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று! மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்… நீதிபதிகள் சொல்கிறார்கள்.. மக்கள்நாயக ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று! எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா! காங்கிரசோ, பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில்…
திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி
சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து, தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52
சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்தூர்
சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 காலை 10.00 முதல் இரவு 9.00 வரை கோயம்புத்தூர் சுடர் ஏற்றம் படத்திறப்பு பறைஇசை கருத்தரங்கம் சாதி மறுப்பு மக்கள்கூட்டியக்கம்
பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு
பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (டிசுகவரி புக் பேலசு) , சென்னை
