வெருளி நோய்கள் 704 -708 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 704 -708 704. கழுதை வெருளி-Gaidouriphobia கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி. கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர். Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை. 00 705. கழுதைக் குரங்கன் வெருளி – Donkeykongphobia காணாட்டங்களில் இடம்பெறும் புனைவுரு கழுதையான கழுதைக் குரங்கன் (Donkeykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதைக் குரங்கன் வெருளி. 00 706. கழுதைப்புலி வெருளி – Yainaphobia கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 1021. Auxiliary force துணைப்படை துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு…
வெருளி நோய்கள் 699-703: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 694-698: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 699-703 699. கழித்தல் வெருளி – Subtractionphobia கழித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கழித்தல் வெருளி. கணக்கு வெருளி உள்ளவர்களுக்குக் கழித்தல் வெருளியும் வருகிறது. கடன்வாங்கிக் கழித்தல் முதலான கணக்கு புரியாமல் கழித்தல் கண்டு அஞ்சுகின்றனர். எனவே, கழித்தல் என்றாலே தேவையற்ற காரணமற்ற அளவுகடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். 00 700. கழிவறை வெருளி – Toualetaphobia கழிவறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழிவறை வெருளி. தூய்மையின்மை, நாற்றம், நோய்த்தொற்று குறித்த கவலை போன்றவற்றால் கழிவறைபற்றிய அளவுகடந்த தேவையற்ற…
வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 689-693 689. கலை வெருளி – Artemophobia கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது. கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது. 00 690. கலைமான் வெருளி –…
வெருளி நோய்கள் 684-688: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 679-683: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 684-688 684. கலவை வண்டி வெருளி – Seemptuophobia கற்காரை கலவை வண்டி (cement truck) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கலவை வண்டி வெருளி. கற்காரை கலவை(concrete mixer/cement mixer)வண்டி, கற்காரை சுமை வண்டி(cement truck) எனப்படுகிறது. எனினும் கற்காரையைச் சுமந்து செல்லும் பார வண்டியே கற்காரை சுமை வண்டி. வேறு எதையாவது சுமந்து செல்லும் பொழுது அப்பொருளின் பெயரில் அழைக்கப்பெறும். எனவே, இங்கே இது கலவை வண்டியையே குறிக்கிறது. 00 685. கலவைப்பண்ட வெருளி…
வெருளி நோய்கள் 679-683: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 679-683 679. கரையான் வெருளி-Isopterophobia கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி. பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர். 00 680. கலங்கரை விளக்க வெருளி – Hotatsosphobia கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி. உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது. 00 681. கலப்பி வெருளி – Blenderphobia/Blendaphobia கலப்பான்/கலப்பி…
வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 674-678 674. கருவண்ண வெருளி-Melanophobia கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி. கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது. பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும்…
வெருளி நோய்கள் 669-673: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 664-668: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 669-673 669. கருச்சிதைவு வெருளி -Staniophobia கருச்சிதைவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கருச்சிதைவு வெருளி. கருச்சிதைவு வெருளி உள்ளோரில் ஒரு பகுதியினர் கருத்தடைக்கும் பேரச்சம் கொள்வோராக உள்ளனர். 00 670. கருத்து வெருளி – Doxphobia/Genviaphobia கருத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கருத்து வெருளி. எதற்கெடுத்தாலும் கருத்துரை சொல்வோர் உள்ளனர். அவ்வாறு கருத்துரை சொல்வது சிலருக்குப் பிடிக்காது. சில நேரம் செயல்பாடுகள் குறித்த கருத்துரையை நல்ல நோக்கததில் சொன்னாலும் எரிச்சல் அடைந்து வெறுப்பர். யாரும் கருத்துரை சொன்னால்…
வெருளி நோய்கள் 664-668: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 659-663: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 664-668 664. கரிம உயிர்ம வெருளி-Monoxeidioanthrakaskisiphobia கரிம உயிர்மப் பயன்பாட்டுத் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிம உயிர்ம வெருளி. இணையத் தளங்களில் விரிவான விளக்கம் கண்டுணர்க. 00 665. கரிம உயிர்வளிம வெருளி-Monoxeidioanthrakaphobia நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சுத் தன்மை மிகக கரிம உயிர் வளிமம் (கார்பன் மோனாக்சைடு) மீதான அளவு கடந்த பேரச்சம் கரிம உயிர்வளிம வெருளி. 00 666. கரிய நீர் வெருளி – Cocaphobia கரிய மென்னீர் கொக்கொ கோலா குறித்த வரம்பற்ற…
வெருளி நோய்கள் 659-663: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 654-658: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 659-663 கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே,…
வெருளி நோய்கள் 654-658: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 649-653: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 654-658 654. கம்பளி யானை வெருளி – Mammothphobia கம்பளி யானை எனப்பெறும் மிகப்பெறும் யானைமீதான பேரச்சம் கம்பளி யானை வெருளி. அடர்ந்த முடிகளால் உடல் மூடப்பட்டுள்ளதால் கம்பளி யானை எனப்பெறுகிறது. 4.8 பேராயிரம்(மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம்.இப்பொழுது இல்லை. எனினும் இதனைப்பற்றிய செய்திகளை அறிய வரும் பொழுது படங்களைப்பார்க்கும்பொழுது பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். Mammoth என்கிற சொல் மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும். ஆங்கிலச் சொல்…
வெருளி நோய்கள் 649-653: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 649-653 649. கத்தரிக் கோல் வெருளி – Psalidiphobia கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி. கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. 00 650. கப்பல் வெருளி – Naviphobia/Navisphobia உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி. navis என்னும் இலத்தீன்…
