மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…
வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்
வேண்டா வரன் கொடை! பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி ! – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும் போன கதை ! ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை ! தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! உத்தமம் (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் – International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல் முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16 தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும்…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி) தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 இந்த ஆய்வு பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில், தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது மலேசியக் கல்வியில் தொலைத்தகவல் 21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது….
பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் ‘திருவேலன் ஒரு பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள் அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர். பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும்….
ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில் காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம். இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில் இருந்து கனடா நிறுவனம் ஒன்று…
தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements) அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும். இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048 / 8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம் பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 முன்னுரை உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…
இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்
இலை அறிவியல் (science of leaf ) காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில்…
மூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன்
மூ மா(Dinosaur) ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த – அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை – ஊர்வனவற்றை மூ ஊரி – மூவூரி…
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம்
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம் துபாய் : துபாய் ஈமான் அமைப்பு ஐப்பசி 17, 2048 / 03.11.2017 / வெள்ளிக்கிழமை இரத்தத்தான முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல்நண்பகல் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி. மருத்துவமனை பின்புறம் உள்ள திறன் மண்டல(talent zone)நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள…
