வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் சார்பிலான முப்பெரு விழாக்கள்
துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது. செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் இயக்குநர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிஞர் அதிரை கலாம் கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அசுகான் ஃச்டார் குழும நிறுவனர் அமரர்…
பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து! பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து! பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து! பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து! பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து! பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து! பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து! பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்…
திருக்குறளே தேசியநூல் – தமிழ்ச்சேய் தஞ்சாவூரான்
குறள்… அன்பின், அறம்பாடியது மறம்பாடியது ஆனால், எந்தமதத்தைப்பற்றியும் புறம்பாடவில்லை! ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… வாழ, பொருள்செய்யும்வழிதந்தது வாழ்க்கை, பொருள்படநெறிதந்தது ஒருக்காலும் வாழ்வில், மருள்படரவரிதந்ததில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… காதலின், இன்பம் சொன்னது காத்திருக்கும், துன்பம்சொன்னது கிஞ்சித்தும் காமம்தூண்டி, வன்மம்சொன்னதில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! தஞ்சாவூரான் துபை. ஐக்கிய அரபு அமீரகம் +971 55 79 88 477
செம்மொழி இதழ், சிங்கப்பூர் : ஆவணி-புரட்டாசி 2045
அன்பிற்கினிய செம்மொழி வாசகர்களுக்கு வணக்கம். தமிழவேள் சமூக நற்பணி மன்றத்தின்சமூக இலக்கிய இதழான செம்மொழியை (சூலை-செப். 2014) உங்களுக்கு வாசிக்கத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். செம்மொழி இதழை www.semmozhi.net இணையத்தள முகவரியிலும் வாசிக்கலாம். அன்புடன் எம்.இலியாசு ஆசிரியர், செம்மொழி செயலர், தமிழவேள் நற்பணி மன்றம் HP: 0065-91894649 sangam_elias@yahoo.com.sg
6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014
சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ‘500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை
மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர். கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து,…
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…
செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது செல்வாக்கை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியன முதன்மையைக் குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேசுவரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்தத் தெரியாத ஒருநிலையா? அல்லது தமிழர்களிடையே இனப்படுகொலைப் போருக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. வெளிப்படைத்…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லையென்று சொல்லுவதில்லை கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன் காட்சிதர மறுப்பதுமில்லை ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன் அரவணைக்கக் கரத்தைநீட்டுவான் நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன் நாளுமெங்கள் அருகில்வந்திடுவான் உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன் உள்ளமதில் வந்துநின்றிடுவான் தெளிவுடனே நாளும்தேடுங்கள் –…
**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**
(புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் ஙு – இலக்குவனார் திருவள்ளுவன்
(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட…
தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙீ
(ஆவணி 22, 2045/ செப்.7,2014 தொடர்ச்சி) 6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக: தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள்…