பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : திருக்கோவிலூர்
பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் திருவெண்ணெய்நல்லூர் 2. கிராமம் 3.திருக்கோவிலூர் சண்பை(சம்பை) – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 198இல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு (தோராயமானது ) மொழி: தமிழ் எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து) வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கைஇராகவன் நாள் : புரட்டாசி 17, 2046 / அக்டோபர் 4,…
பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்
‘ தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…
காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி
புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்! தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும். அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…
பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – வே.பாரதி
ஐநா மனித உரிமை மன்றம்: பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி அறிக்கை ஐநா மனித உரிமை மன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா முன்மொழிந்து நிறைவேறிய தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பன்னாட்டுப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையை 16.09.2015 ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்ற 30 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் செய்யது அல் உசைன் அவர்களின் அறிக்கையும் வெளிவந்துள்ளது….
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000!
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை” “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு உரூ.5,000 இரண்டாம் பரிசு உரூ.3,000 மூன்றாம் பரிசு உரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும் “தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்! இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! வகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக்…
திராவிடர் 100 – முன்பதிவுத் திட்டம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2015
‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047
‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047 வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத்…
இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது! – வைகோ
இலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது! – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…
மகளிர் நலம் காக்கும் மணிமேகலை அம்பலவாணனுக்கு ‘நிகரி’ விருது
நல்லாசிரியர் துளசிதாசனுக்கும் நிகரி விருது. மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015 ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ‘நிகரி’ என்னும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, சமயபுரம் எசு.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஃபெமினா உணவகத்தில், ஆவணி 19, 2016 / செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு…
யாழ்ப்பாவாணனின் வலைப்பூக்கள் இணைப்பு
புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 04 http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் உளநலப் பேணுகைப் பணி யாழ்பாவாணனின் எழுத்துகள் யாழ்பாவாணன் வெளியீட்டகம் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் இவ் வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு…
‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம்
நேசமிகு தோழமையே! வணக்கம். ‘நம் குடும்பம்’ மாத இதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ‘நம் குடும்பம் ‘ தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையருக்கான, ஒரே மாத இதழ். ‘வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு(ம்)’ என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். அரசியல், சமயம், ஆபாசம் இம்மூன்றையும் தவிர்த்த ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானது ‘நம் குடும்பம்’. ‘நம் குடும்பம்’ மாத இதழ் இதுவரை 21 மாதங்கள் வெளிவந்திருக்கின்றது. குடும்ப உறவுகளின்அடிப்படையையும், இன்றியாமையாமையும் அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்பெற்ற நம் மண்ணின் இளையதலைமுறைக்குப் புரிய வைப்பதற்கான தொடர்…