இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..              ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,              மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..                                தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..   சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..               விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014

நிகழ்ச்சி நிரல் செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு சிறப்பு விருந்தினர்கள் உரை: பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன் முனைவர் பார்வதி கந்தசாமி திரு.குணரட்ணம் இராசுகுமார் ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க –…

வாழ்வியல் பயிற்சி, சென்னை

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றத்தின் வாழ்வியல் பயிற்சி தொடர்பொழிவு ஆனி – மார்கழி, 2045   25 தலைப்புகளில் துறைசார் அறிஞர்களின் சொற்பொழிவு, கலந்துரையாடல் இணைந்த கருத்தரங்காக ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும். 15 அகவைக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்துத் துணை நில்லுங்கள். தொடக்க விழா: ஆனி 22, 2045 – 06.07.2014 ஞாயிறு பிற்பகல் 3 மணி முதல் 5:30 மணி வரை. தொடர்பொழிவு: நாட்கள் : 13.07.2014 முதல் 28.12.2014 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும்.. நேரம்…

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் – தொடக்க மாநாடு, 2014

  பெருந்தகையீர் அனைவரும் வருக! மதுரை மாநகரில் ஆகத்து 17-ல் ஒன்றுகூடுவோம்! தமிழ்நாட்டிற்கான கல்வியை உருவாக்குவோம்!  

அகதிகள் அனாதைகள் அல்லர்!

எதிர்வரும் சனி  ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து  ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ்  ஏதிலியரின்  நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ்  ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…